“சக்திவேலன்..  ஒரு லக்கி சேம்ப்!”: ‘ரணம்’ டிரைலர் வெளியீட்டில் நடிகை சரஸ் மேனன்

“சக்திவேலன்..  ஒரு லக்கி சேம்ப்!”: ‘ரணம்’ டிரைலர் வெளியீட்டில் நடிகை சரஸ் மேனன்

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் – அறம் தவறேல்”.

அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடிகை சரஸ் மேனன் பேசும் போது, “பத்திரிக்கையாளர்கள், ரணம் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். ஒரு புராஜெக்டில் நாம் இணைவதற்கு முன்னர் நடிகர் நடிகைகளுக்கு ஆடிஷன் நடக்கும். எனக்கும் சில புராஜெக்ட்கள் காலதாமதமாகி இருக்கிறது. அப்பொழுது நான் ஒரு வெஃப் சீரிஸில் கிரியேட்டிவ் வொர்க் மற்றும் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த ஸ்பாட்டில் என்னோடு ஒளிப்பதிவாளர் செல்வா மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் உதய் போன்றோர் பணியாற்றி வந்தனர்.அப்பொழுதே எனக்குத் தெரியாமல் அவர்கள் என்னை ஆடிஷன் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. எனவே இதன் மூலம் இப்படத்தில். எனக்கு உதவி இயக்குநராக நடிக்கவே ஆடிஷன் இல்லாமலே வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் நான்கு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதால் எனக்கு இக்கதாபாத்திரம் செய்வது எளிதாக இருந்தது. ஷெரிஃப் மற்றும் மது சார் இருவருக்கும் என் நன்றிகள். என்னுடன் நடித்த தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். வைபவ் சாரின் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும்.

அவரின் 25வது படத்தில் நடித்திருப்பது பெருமை. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி. சக்திவேலன் சாருக்கு நன்றி. அவர் வெளியிடும் படங்கள் என்றால் நல்ல படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும். இப்பொழுது சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் (LUCKY CHAMP). இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து பெண்கள் அனைவரும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள் ” என்றார்.

Related Posts