கல்விக்கண் கொடுத்த சைதையார்! பார்வை குறைபாடு உள்ள பெண்’ ஐஏஎஸ் தேர்ச்சி!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மனித நேயர் சைதை துரைசாமி அவர்களால்   சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005-ம் ஆண்டு நல்ல நோக்கத்துடன் மனித நேயம்  அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மனிதநேயம் அறக்கட்டளை 15 ஆண்டுகளாக இலவச கல்வி சேவையை செய்துவருகிறது. உயர்கல்வியான IAS., IPS, IFS மற்றும் குரூப் 1, குரூப் 2 ஆகிய உயர்பதவிகளுக்கான ஏழைகளின் எட்டக்கனியான பயிற்சியை வழங்கி அவர்களது கனவுக்கு உயிர் கொடுத்து சாதித்து வருகிறது சைதையாரின் மனிதநேயம் அறக்கட்டளை.

தொடர் சாதனையை கொடுத்துவரும் சைதையாரின் மனிதநேயரின் அறகட்டளை இந்த ஆண்டுக்கான சிவிர் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சமிபத்தில் வேளியாகின.  இங்கு படித்த 16 மாணவியரும் 13 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய அளவில் ஐஸ்வரியா 47 இடத்தையும், 68வது இடத்தை பிரியங்கா, இதில் முன்னால் முதல்வர் அண்ணாத்துரையின் பேத்தி 171 இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த  பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்று சாதித்துள்ளார்.இது பற்றி அவர் கூறும் போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது தனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும்  அறுவை சிகிச்சை செய்தும் பார்வை சரியாகவில்லை பெற்றோர் மற்றும் ஆசிரியர் உதவியுடன் படித்ததாக  கூறினார்.

பாத்திமா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்த பூர்ண சுந்தரி மூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு கல்லுாரி படிப்பு முடித்ததும் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சியில்  சேர்ந்தேன். பயிற்சியின் போது ஆசிரியர்கள்,தோழிகள் உதவினார்கள்.  நான்காவது முறை எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறினார். வறுமையில் வாழ்ந்த பூர்ண சுந்தரிக்கு சாதிக்க வாய்ப்பைக் கொடுத்து   பார்வைக்குறைபாடுள்ள அவருக்கு வாழ்க்கையில் ஐஏஎஸ் எனும் ஒளியை வழங்கி சாதித்துள்ளது சைதையாரின் மனிதநேய அறக்கட்டளை.

யாழினி சோமு