திரைப்பட விமர்சனம் : ரூட் நம்பர் 17

திரைப்பட விமர்சனம் : ரூட் நம்பர் 17

முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக். இவரது  காதலி அஞ்சு.

இருவரும் வனப்பகுதிக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களை, ஜித்தன் ரமேஷ் கடத்துகிறார். ஒரு பாதாள அறையில் வைத்து டார்ச்சர் செய்கிறார்.

காணாமல் போன ஜோடியை  தேடி, காவல்துறை களம் இறங்குகிறது. அப்போதுதான், அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது.

இந்த மர்ம சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் யார், அவரது நோக்கம் என்ன என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ படத்தின் மீதிக்கதை.

வில்லன் + ஹீரோவாக அசத்தி இருக்கிறார். மனநிலை மாறுபாடு கொண்டவர் போல.. அதிகம் பேசாமல்.. கொடூரமாக பார்ப்பது, வித்தியாசமான உடல் மொழி என மிரட்டி இருக்கிறார்.   அதே நேரம் பிளாஷ்பேக்கில் வேறு ஒரு கோணத்தில் வந்து கவர்கிறார்.காதல் ஜோடி கார்த்திக் – அஞ்சு, வில்லன்  ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் டாக்டர். அமர் ராமச்சந்திரன்,  கான்ஸ்டபிள்  அருவி மதன் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

காட்டுப்பகுதி, கடத்தல் என திகிலுக்கு பஞ்சமில்லாத ஏரியா. இதை உணர்ந்து இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், திகில் காட்சிகளை அமைத்து மிரட்டி இருக்கிறார். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை கிளைமாகஸ் வரை ஏற்படுத்தி இருக்கிறார்.

கலை இயக்குநர் பேபோர் முரளி பாதாள அரையை வடிவமைத்த விதம், அந்த சிறு இடத்தில் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம், இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘ரூட் நம்பர் 17’ திரில்லர் பட ரசிகர்களை திருப்தி படுத்துகிறது.

 

Related Posts