விமர்சனம்: போர்  

விமர்சனம்: போர்  

கல்லூரி மாணவர்கள் இருவரிடையே துவங்கும் ஈகோ யுத்தம், பல்கலைக் கழகத்தையே சிதைப்பதுதான் கதை.

மோதிக்கொள்ளும் இரு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து உள்ளனர்.

அவர்கள் படிப்பது பல்கலைக்கழகம்தானா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.  சரளமாக புழங்கும் போதை பழக்கம், பேராசிரியர்களுக்கு அடங்காத மாணவர்களின் அடிதடி, ஜோடி ஜோடியாகவே சுற்றுகிறார்கள்… அப்படியோர் பல்கலை!

தவிர நடிகர் – நடிகைகளைப் பார்த்தால் மாணவர்களா, முன்னாள் மாணவர்களா என்கிற கேள்வி எழுகிறது.

அர்ஜூன்தாஸ் அப்படித்தான். ஆனால் வழக்கமான தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதல், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவரது பரம விரோதியாக, காளிதாஸ். கிட்டதட்ட கல்லூரி மாணவர்  என்கிற தோற்றம்.

நாயகிகள் சஞ்சனா நடராஜன், டி. ஜெ. பானு மற்றும்  நித்யஶ்ரீ, அம்ருதா ஸ்ரீனிவாசன் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.

 

கல்லூரி – பல்கலை என்றாலே மாணவர்களின் அடாவடிதான் என்பதே படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் உச்சம், போர் திரைப்படம். மாணவர்களின் வன்முறையை யாரும் தட்டிக்கேட்கவே மாட்டார்களா என்ன..

இறுதிக்காட்சியில் கூட, போலீஸ் வந்து வேடிக்கை பார்த்து விட்டுச் சென்று விடுகிறது.

 

அதே நேரம் தன் பால் ஈர்ப்பு, சாதி பிரச்சினை, அரசியல் சதிராட்டம் என பல விசயங்களை தொட்டு இருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர்கள்  ஜிம்ஷி காலிட், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசா,  பின்னணி இசை ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன்,  கௌரவ் கோட்கிண்டி,
கலை இயக்குநர்கள்  லால்குடி இளையராஜா, மானசி சாவரே, படத்தொகுப்பாளர்கள் பிரியங்க் பிரேம் குமாரி… என்று பலரும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனாலும்.. போர்.. வெறும் அக்கப்போராகிவிட்டதுதான் சோகம்!

 

Related Posts