விமர்சனம்: காமி

விமர்சனம்: காமி

வித்தியாசமான போபியாவால் பாதிக்கப்பட்ட சங்கர் என்கிற அகோரி, வலுக்கட்டாயமாக தேவதாசி ஆக்கப்பட உள்ள உமா என்கிற  சிறுமி, மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகமொன்றில் வதைபடும் இளைஞர்… இவர்கள் மூவரது வாழ்க்கை… இவர்கள் தங்கள் இக்கட்டில் இருந்து தப்பித்தார்களா.. இவர்கள் இணையும் புள்ளி என்ன என்பதே கதை.

ஒவருக்கொருவர் தொடர்பில்லாத இந்த மூவரும் இணையும் புள்ளி என்பது சுவாரஸ்யம்தான்.  ஆனால் இவர்கள் மூவரின் கதையுமே ரொம்பவே சோதிக்கின்றன.  ஸ்லோ ஸ்லோ ஸ்லோ மோஷன்.

தன்னைப்போலவே தனது மகளான சிறுமியை தேவதாசி ஆக்கிவிடுவார்களோ என பதட்டப்பட்டு அந்த சிறுமியை காப்பாற்றப் போராடும் தாய்,  மருத்துவ சோதனை என்று வதை முகாமில் சிக்கி தப்பிக்க நினைக்கும் இளைஞன், தனது வித்தியாசமான நோயைப் போக்க இமய மலையில் ஆபத்தான பகுதியில் விளையும் காளானை பறிக்க பயணிக்கும் நாயகன்.. என்று வித்தியாசமான மூன்று கதைக்களங்கள்.   ஆனாலும் ஏற்கெனவே சொன்னது போல அத்தனை ஸ்லோ காட்சிகள்.

சிறுமி உமாவாக ஹாரிகா,  மருத்துவ சித்திரவதைக் கூடத்தில்  இருந்து தப்பிக்க முயலும் இளைஞனாக முகம்மது சமத், அகோரியாக நாயகன் விஸ்வக் சென்,  அவனது பயணத் தோழியாக சாந்தினி சவுத்ரி, தேவதாசியாக அபிநயா என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

இமயமலையின் பிரம்மாண்டத்தை, குளிரை தனது கேமராவில் பத்திரப்படுத்தி அளித்து உள்ளார் ஒளிப்பதிவாளர் விஸ்வந்த் ரெட்டி செல்லுமலா. சிறப்பு.

நரேஷ் குமரனின் பின்னணி இசை,  இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள்  அனைத்தும் படத்துக்கு பலம்.

ஏற்கெனவே சொன்னது போல, மூன்று வெவ்வேறு கதைகளை இறுதியில் அழகாக முடிச்சிட்டு உள்ளனர். ஆனால் கடைசி பத்து நிமிடம் வரை இத்தனை மெதுவாகவா… அதுதான் மைனஸ்.

மற்றபடி வித்தியாசமான திரைப்படம்.

 

 

Related Posts