விமர்சனம்: அமிகோ கேரேஜ்

விமர்சனம்: அமிகோ கேரேஜ்

‘பீப்பிள் புடக்சன் ஹவுஸ்’ முரளி ஶ்ரீனிவாசன்,  என்.வி. கிரியேசன்ஸ்  நாகராஜன் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் உருவாக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.

படித்துவிட்டு  வேலைக்குச் செல்லும் இளைஞன் ருத்ராவுக்கு, தவறான பழக்கம் & நண்பர்களால்   எப்படி வாழ்க்கை திசை மாறுகிறது என்பதே கதை.

நாயகன் ருத்ரனாக நடித்து உள்ளார் மாஸ்டர் மகேந்திரன். வீட்டுக்கு அடங்காத மகனாக, சந்தர்ப்ப சூழலால் கேங்கஸ்டராக மாறும் இளைஞனாக நடித்து உள்ளார்.நாயகனின் அடிதடி குருவா நடித்து உள்ளர் ஜி.எம்.சுந்தர். இயல்பான டயலாக் டெலிவரி – நடிப்பால் கவர்கிறார். அதுவும் சிறு வயதில் தான் காதலித்த கதையைச் சொல்லும்போது ரசிக்க வைக்கிறார்.

நாயகி தமிழ் கதாபாத்திரத்தில் ஆதிரா நடித்து உள்ளார்.  காதல் காட்சியிலும், காதலனின் ரவுடித்தனம் பிடிக்காமல் குமுறும் காட்சியிலும் ஈர்க்கிறார்.

விஜயகுமார் சோலை முத்துவின் ஒளிப்பதிவு, பாலமுரளி பாலுவின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.ரூபன் – சி.எஸ். மகேந்திரன் ஆகியோரின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கச்சிதமாக இருந்திருக்கலாம்.

ஸ்ரீமான் பாலாஜினியின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த அமிகோ கேரேஜ் செட். அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், முதல் படத்திலேயே  அதிரடியான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  அதை ரசிக்கும்படியும் சொல்லி இருக்கிறார்.

 

 

 

 

Related Posts