நடிகர் ராம்சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்! வேல்ஸ் கல்வி நிறுவனம் வழங்குகிறது!

நடிகர் ராம்சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!  வேல்ஸ் கல்வி நிறுவனம் வழங்குகிறது!

ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இத்திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து புச்சிபாபு இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிக்கிறார். இது ராம்சரண் நடிக்கும் 16-வது படமாகும். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகர் ராம்சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், வரும் 13-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற் இருக்கும் நடிகர் ராம்சரணின் கலைத்திறமையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் ராம்சரண் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Posts