பித்தல மாத்தி: விமர்சனம்

பித்தல மாத்தி: விமர்சனம்

சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்க, மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி – சம்ஸ்க்ருதி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம், பித்தல மாத்தி.

வாகனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார் நாயகன் உமாபதி. உலர் சலவை நிறுவனம் நடத்தி வருகிறார் நாயகி சம்ஸ்கிருதி. இருவரும் காதலிக்கிறார்கள். இதற்கிடையே, நாயகன் மூலமாகவே நாயகிக்கு பிரச்சனை வர, அந்த பிரச்சனையில் இருந்து நாயகன் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்‌சன் என படத்தை சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.

நாயகன் உமாபதி ராமையா, இயல்பாக நடித்து இருக்கிறார்.  சண்டைக்காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் தூள்பரத்துகிறார்.

நாயகி சம்ஸ்கிருதியும் இளமை துடிப்புடன் நடித்து உள்ளார். அழகிலும் கவர்கிறார்.

உமாபதியின் நிஜ அப்பாவான ராமையாவே, படத்திலும் அப்பாவாக வருகிறார். வழக்கமான காமெடி நடிப்பை அளித்து உள்ளார்.

வினுதா லால் அதிரடி வில்லியாக வந்து கவர்கிறார். பால சரவணனின் காமெடி ஓகே ரகம்.தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, விதுலேகா, சேரன் ராஜ் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஒரு சில காட்சிகளில் வரும் மதுரை முத்து, ஜார்ஜ் ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

மோசஸின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

எஸ்.என்.வெங்கட்டின் ஒளிப்பதிவு அருமை.

வழக்கமான கதை தான். ஆனால், காமெடி, சென்டிமெண்ட், காதல் என ரசனையுடன் அளித்து உள்ளார் இயக்குநர்.

தயாரிப்பாளர் சரவணன், பல்வேறு சிரமங்களைக் கடந்து, இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஜாலியான படம் கொடுத்த படக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

பார்த்து ரசிக்கலாம்…!

 

Related Posts