விமர்சனம்: நினைவெல்லாம் நீயடா 

விமர்சனம்: நினைவெல்லாம் நீயடா 

லேகா தியேட்டர்ஸ் சார்பாக ராயல் பாபு தயாரிப்பில், ஆதிராஜன் இயக்க, இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் “நினைவெல்லாம் நீயடா”.

பிரஜின் தன் பள்ளிக் காலம் முடிந்து பல வருடங்கள் ஆகியும், பள்ளித் தோழி யுவலக்ஷ்மி மீது அதே அடங்கா காதலுடன் இருக்கிறார். காதல் பிரிவால் குடிக்கு அடிமையாகிறார்.

இன்னொரு பக்கம், பிரஜினை உயிருக்கு உயிராக  தீவிரமாக காதலிக்கிறார் முறைப்பெண் மனிஷா யாதவ். ஒரு கட்டத்தில் பிரஜின், குடும்பத்தினர் வற்புறுத்தலால் மனிஷாவையே திருமணம் செய்கிறார்.

அதன் பிறகு இந்த முக்கோண காதல் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

ரோஹித் – யுவலக்ஷ்மி பள்ளிக்கால காதல், மனதை வருடுகிறது.   சிறப்பாக நடித்து உள்ளனர். பிரஜின் – சினாமிகா நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

நண்பர்களாய் வரும் பள்ளி கால அபி நட்சத்திரா, கோதண்டம் வில்லன் யாசர் ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.  மனோபாலா வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார். அதே போல, ரெடின் கிங்ஸ்லி – மதுமிதா  ஆகியோரின் நகைச்சுவை காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

இளையராஜாவின் இசையும், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவும் காதலுடனேயே படத்துடன் பயணிக்கின்றன.

காதல், துள்ளல், பிரிவு, வலி என அனைத்து உணர்வுகளையும் தனது எழுத்திலும், இயக்கத்திலும் வெளிப்படுத்தி ரசிக்க – நெகிழ வைத்து உள்ளார் இயக்குநர் ஆதிராஜன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, காதலாகி கசிந்துருகும் திரைப்படம்.

Related Posts