புத்தாண்டு தினத்தில் சென்னைக்கு வரும் வழியில் 6  பேர் பலி

சென்னைக்கு புத்தாண்டை கொண்டாட வந்தவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. புளியந்தோப்பு பழைய போகிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (40) இவர் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக இருக்கிறார்.  இவர் நேற்று இரவு தனது இருசக்கரவாகனத்தில் நீதிமன்றம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

புழல் ஜெயில் எதிரே வரும்போது, இவரது வாகனதிற்குப் பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தார்.

செங்குன்றம் எம்.ஏ. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் 31 இவர் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில்  கதிர்வேடு சிக்னல் அருகே வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இவர் உயிரிழந்தார்.

இந்த இரண்டு விபத்துளையும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எண்ணூர் குப்பம் சேர்ந்தவர் சுந்தர் 48 இவர் நேற்று 1.40 மணி அளவில் தாளாங்குப்பம் கடற்கரையை யொட்டிய சாலையில் இருசக்கரவாகனத்தில் செல்லும்போது எதிரே புல்லட் மோதியதில் சுந்தர் பலியானார். புல்லட்டை ஓட்டி வந்த ஆகாஷ் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மேலும் ஒடிசாவை சேர்ந்த முகமது மோதின் 45 பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர் குப்பத்தில் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். நேற்று இரவு சைக்கிளில் செல்லும் போது ஆட்டோ மோதியதில்  பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட இவர்  இன்று காலை உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் சேர்ந்தவர்கள் விக்னேஷ்ஷா (24) சங்கர் ஷா (26), இருவரும் புத்தாண்டு கொண்டாடிவிட்டு. அதிகாலை 3 மணியளவில் சென்னையில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட காரில் 6 பேர் சென்னைக்கு புறப்பட்டனர்.

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருங்காட்டு கோட்டையில் லாரி மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் ஷா, சங்கர் ஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ்சார் விசாரிக்கின்றனர்.