திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – ஷாருக்கான்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – ஷாருக்கான்…

ஜவான் படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் நயன்தார விக்னேஷ் சிவன் மற்றும் ஷாருக்கான் திருப்பதி சென்றுள்ளனர்.

ஜவான் படம் செப்டம்பர் 7 வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் ஒருபக்கம் பிஸியாக இருக்கிறார்கள். இதற்கிடையில் ஷாருக்கான் அவரது குடும்பத்தினரும் நயன்தாரா,விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு கோயிலின் பிரதான வாயிலில் வரவேற்ற அதிகாரிகள், தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்,விஜய்சேதுபதி, மற்றும் நயன்தாரா நடிப்பில் இருக்கும் திரைப்படம் ஜவான். இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இயக்குநர் அட்லியின் ஜவான் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு, ரிதி டோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts