“எம்.பி.எம்.: விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படம்!”: தயாரிப்பாளர் தனஞ்செயன் தகவல்

“எம்.பி.எம்.: விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படம்!”: தயாரிப்பாளர் தனஞ்செயன் தகவல்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவது அவரைக் கொண்டு வருகிறோம் என அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டோம்.

அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் படத்தில் வரவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைப் போன்ற லெஜெண்ட் சத்யராஜ் சாரிடம் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்டோம். உடனே ஒத்துக் கொண்டார். விஜய் ஆண்டனி சார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மூன்று வருடங்கள் உழைத்து விஜய் மில்டன் நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுங்கள்”.