கொரோனா நோயாளியின் உருகவைக்கும் கவிதை

கொரோனா பீதியால் அனைவருமே அச்சத்துடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறோம்.  இந்நிலையில், கொரோனா நோயாளி ஒருவர், தனது நிலை குறித்து எழுதியதாக சமூகவலைதளங்களில் ஒரு கவிதை வேகமாக பரவி வருகிறது. உருக வைக்கும் அந்த கவிதை..

 

எங்கள் கூடு மிக எளியது
மழலை பெரியவர்களாலும்
வயதான மழலைகளாலும்
நிரம்பியது…

இன்று தனிமைப்படுத்தலின்
கூரிய பற்களின் இடுக்கில் எங்களை தற்காத்துக் கொண்டிருக்கிறோம்…

ஜிம்மிக்கும் வீட்டுக்கோழிக்கும்
நாங்கள் கூடடையாத சோகம் இந்நேரம் தொற்றியிருக்கக் கூடும், பசி தாங்காதவர்கள்….

விடியகாலம் முதலே மருத்துவமனையில் தொட்டி தேடி, தேனீர் கேட்டு
அழுதிருக்கிறான் 2ஐ தொடாத மகன்..

பால்காரர் வந்துவிடுவார் வீட்டுக்கு
சென்றுவிடுவோம் என ஆற்றுப்படுத்திக்கொண்டிருக்கினார் துணை…

எழுத்தை தவிர வேறொன்றும் அறியாத எளியவனுக்குத் தான் சுற்றத்தில்
எத்தனை எதிரிகள்,
எனினும் நண்பர்கள் சுற்றமாகி தொடர்கின்றனர் மகிழ்ச்சி….

இந்த கொடுங்காலம் இன்னும்
இருபது நாட்களுக்குள் இருள
எல்லாம் வல்ல பேரியற்கை
அதன் பிள்ளைகளுக்கு கருணை செய்யட்டும்…