நடுராத்திரி சின்மயி செஞ்ச வேலையப் பாருங்க!

லர் மீது மீ டூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, நடிகரும் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவருமான ராதாரவி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசினார்.   

இந்நிலையில், திரைப்பட டப்பிங் சங்க தேர்தலில் தற்பதைய தலைவர் ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டியிடுகிறார். .

இது குறித்து சின்மயி அணியைச் சேர்ந்தவரும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுபவருமான சாந்தகுமார் என்கிற ராஜசேகரன், “நீண்டகாலமாக தலைவர் பதவியில் இருக்கும் ராதாரவி மீது முறைகேடு, லஞ்சம் உட்பட பல புகார்கள் உள்ளன. ஆகவே புதிய தலைமை வேண்டும் என்பதற்காக சின்மயி தலைமையில் அணிவகுத்துள்ளோம், “ என்றார்.

ஆனால் சின்மயி பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. இதையடுத்து அவர்,  “நான் போட்டியிட முடியாமல், ராதாரவி சதி செய்துவிட்டார்,” என்றார்.

இது  சம்பந்தமாக ராதாரவி அணியைச் சேர்ந்த டி.என்.பி கதிரவனை தொடர்பு கொண்டு கேட்டபோது.

இதுவரை அவர், “முறையாக சந்தா செலுத்தியதில்லை. கடந்த 2018ல் தேர்தல் அதிகாரிதான், சின்மயிக்கு ஓட்டு கிடையாது  என்று அறிவித்தார். அதன் பிறகும் சரியாக சந்தா செலுத்தாத சின்மயி, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 2 மணிக்கு அவசர அவசரமாக, சங்க கணக்குக்கு சந்தா பணத்தை டிரான்ஸ்பர் செய்தார். அதை நாங்கள் ஏற்கவில்லை”; இந்த மாதிரி யார் நடுராத்திரியில் விழித்துக் கொண்டு இப்படி நடந்து கொள்வார் இவரை என்ன வென்று அழைப்பது’’ என்றார்.