கவனம் ஈர்க்கும் ஸ்ருதிஹாசன் – லோகேஷ் இணைந்து நடித்த’இனிமேல்’ஆல்பம் சாங்…

கவனம் ஈர்க்கும் ஸ்ருதிஹாசன் – லோகேஷ் இணைந்து நடித்த’இனிமேல்’ஆல்பம் சாங்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மிக நெருக்கமாக காதல் காட்சிகளில்  இருவரும் நடித்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆல்பம் பாடலின் வரிகளை நடிகர் கமல் எழுதியுள்ளார். இப்பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி இருக்கு? – வழக்கமான காதல், இருவருக்குமான இணக்கமான ரொமான்ஸ், அடுத்து வரும் சண்டை, பிரிவு, மீண்டும் புரிந்து சேர்வதுபோல் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் லோகஷ் கனகராஜ்.
காதல்,கோபம்,வெறுப்பு, இணைக்கம் என அத்தனையும் தனது முகபாவனையில் காட்டியிருக்கிறார் லோகேஷ். ஆங்கிலம் கலந்த பாடல் வரிகள் தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும்.

ஆல்பம் பாடல் வீடியோ கீழே…

Related Posts