குழந்தை பாக்கியம் தரும்  கிருஷ்ண ஜெயந்தி விரதம்! பூஜைக்கு ஏற்ற நேரம்

சென்னை: ஆடி 27 ஆகஸ்ட் 11ஆம் தேதி நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார் என புராணம் கூறுகிறது. வழக்கமாக ஆவணி மாதம் தான் இந்த கிருஷ்ண ஜெயந்தி வரும். ஆனால் இந்தாண்டு ஆடி மாதமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாளை தமிழகமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஆனால்  வட மாநிலங்களில்  நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி  செவ்வாய்கிழமையான நாளை காலை 09.07 மணிக்கு அஷ்டமி திதி ஆரம்பமாகிறது.   இது மறுநாள் ஆகஸ்ட் 12 புதன்கிழமை பகல் 11.17 மணிவரை அஷ்டமி திதி இருக்கிறது.

 கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.   நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் கிருஷ்ணன் படம் வைத்து பூஜை செய்யலாம்.

நாளை அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு வீட்டை சுத்தம் செய்த பிறகு பச்சரிசி மாவுகொண்டு கிருஷ்ணர் பாதம் வரைய வேண்டும்.   இப்படி செய்வதால் கிருஷ்ணரே நமது வீட்டுக்கு வருகிறார் என்பது ஐதீகம்.

நமது வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு ஆண் பிள்ளை என்றால்  கிருஷ்ணர் போல் அலங்கரிக்க வேண்டும். அதுவே பெண் பிள்ளை என்றால் ராதை போல் அலங்கரிக்க வேண்டும். மாலை நேரத்தில் பூஜை அறையில் தோரணங்கள் கட்டி பலகாரங்கள் படைத்து வழிபடவேண்டும்.

கிருஷ்ணனுக்கு பிடித்த உணவு;

கிருஷ்ணருக்கு பிடித்தது முருக்கு, சீடை, வெண்ணெய், அவல், இனிப்பு சீடை, முருக்கு, தட்டை, பணியாரம் ஆகியவை பிரியமான உணவுகள்.    வீட்டில்  செய்தோ அல்லது கடையில் வாங்கிவைத்தும்  படைக்கலாம்.

இது இல்லை என்றாலும் பரவாயில்லை கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த அவல்,வெண்ணெய் மட்டும் வைத்து எளிமையாக வணங்கலாம். இறைவன் இதை ஏற்றுக் கொண்டு  செல்வத்தையும், குழந்தைகளுக்கு நோய் நொடி வராமால் பாதுகாத்திடுவார்.

பூஜைக்கு ஏற்ற நல்ல நேரம் காலை 10-30 முதல் 11-00 மணி வரை பகல் 12-00 முதல் 01-00 மணி வரை மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை பூஜைக்கு ஏற்ற நேரம் என கூறபடுகிறது. 

கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை இல்லாத தம்பதியர் விரதம் இருந்து கிருஷ்ண மந்திரம் படித்து விரதத்தை  நிறைவு செய்தால்  புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

யாழினி சோமு