சரக்கடிக்கும் கால பைரவர்… மர்மம் நிறைந்த வினோத கோவில் !!

சரக்கடிக்கும் கால பைரவர்… மர்மம் நிறைந்த வினோத கோவில் !!

காலத்தை மாற்றுபவர் காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர். இவருக்குஒரு சில இடங்களில் மட்டுமே மூலவராக தனிக்கோயில்உண்டு.கால பைரவர் சிவ பெருமானின் ருத்திர ரூபமாக கூறப்படுபவர். சிவன் கோவில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் நாயுடன் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாய் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்.

கால பைரவ தலங்களில் மிக முக்கிய கோவிலாகவும், பல அதிசயங்களையும், மர்மங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி கால பைரவர் கோயில். பல ஆன்மீகதலங்களுக்கு சென்று வரும் ஆன்மீகவாதி தே.யாதவராமன் அவர்கள் இந்த கோவில் பற்றியும் அதன் அதிசயத்தையும் ஆன்மீக நம்பிக்கையை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

கோவிலின் சிறப்பு என்ன?

நான் நிறைய ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன்.ஆனால் எனக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் தந்தது உஜ்ஜையினியில் இருக்கும் காலபைரவர் கோயில் தான். இந்த கோவிலில் மூலவராக காலபைரவர் விளங்குகிறார். அம்மனாக பாதாளபைரவி பக்தர்களுக்கு அன்புடன் அருள்பாலிக்கிறாள். நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் அதன் தலவரலாறு பற்றி தெரிந்து கொள்வேன்.

மிகப்பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் சிவன், பார்வதி, விநாயகர், மகாவிஷ்ணு போன்ற கடவுள்களும் கோவிலுக்குள் இருக்கின்றனர். உஜ்ஜையினி காலபைரவர் கோயிலின் நுழைவு வாயில் கோட்டை வடிவில் மால்வா கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது. இது பரமர வம்சத்தினர் ஆட்சிக் காலத்தை சேர்ந்தவை என கூறுகின்றனர்.

கோவிலின் தனி சிறப்பு என்ன?

தமிழகத்தில்இருக்கும் நாம் பார்க்கும் கால பைரவருக்கும் இந்த பைரவருக்கும் வித்தியாசம் உண்டு.உஜ்ஜயினி கோவிலில் இருக்கும் பைரவருக்கு உடல் கிடையாது பெரிய அளவில் தலை மட்டுமே கருவறையில்உள்ளது.

தமிழககோவில்களில் முழு உருவமாக நாயுடன் காட்சி அளிப்பார் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக  பாவம் போக்கும் கடவுளாக தலையுடன் காட்சி கொடுக்கிறார் பைரவர்.
இங்குள்ள கோயில் சுவர்களில் இறைவனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நான் வியந்த பார்த்த பூஜை முறைகள்:

பொதுவாககோவில் என்றால் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடைகள் பெரும்பாலானவை பூக்களும்,பூஜைக்கு ஏற்ற அபிஷேகப் பொருட்களும் தான் கடைகளில் இருக்கும் ஆனால்’ இங்கு கோவிலை சுற்றி நூற்றுக்கணக்கான மதுபானக் கடைகள் நிரம்பி வழிகிறது.ஒரு தாம்பூலத் தட்டில் பூ,பழம், ஊது பத்தியுடன் கட்டாயம் மதுபாட்டிலும் வாங்கி செல்கின்றனர். வெளிநாட்டு சரக்கு முதல் மலிவான மது பானங்களும் கிடைக்கின்றன.பக்தர்களின் வசதிக்கு ஏற்றது போல் வாங்கி செல்லலாம். பக்தர்கள் வாங்கி வரும் மதுபானத்தை ஒரு தட்டில் ஊற்றி பைரவர்வாய் அருகில் வைக்கின்றனர். அப்படியே அந்த மதுவை உறுஞ் விடுகிறார் பைரவர்.

ஆனால் உறிஞ்சப்படும்மது எங்கு செல்லும் என்பது பற்றி இதுவரை மர்மமாகவேஇருக்கிறது, சாமி சிலையை சுற்றி ஒரு துளிகூட ஈரமோ, மது சிந்திய அடையாளமோ இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

எத்தனையோ ஆரச்சிகள் நடத்தியும் இதுவரை பைரவர் வாயில் செல்லும் மது எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

கோவிலின் வாசலில் பைரவரின் வாகனமான நாய் சிலை ஒன்று உள்ளது.அங்கு வரும் நாய்களுக்கு பக்தர்கள் பணிவோடு உணவு கொடுக்கின்றனர். நூற்றுக்கணக்கான நாய்வந்தாலும் அத்தனை நாய்களுக்கும் உணவு கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கோவில் மாந்திரீக, மற்றும் தாந்திரீக செயலுக்குஉகந்த கோவிலாக கருதப்படுகிறது. கோவிலைச் சுற்றி நீண்ட சடையுடன் அகோரிகள், உடல் முழுவதும்திருநீறு பூசிய சாதுக்களை நிறைய பேரை நம்மால் பார்க்க முடிகிறது.

                     தே. யாதவ ராமன்

கால பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பைரவ மூர்த்தி சனியின் குரு என்பதால், ஏழரை சனி, அஷ்டமத்து சனி, ஜென்ம சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவர் வழிபாட்டால் குறைக்கலாம் என்பது நம்பிக்கை.பைரவர் அருகே உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், அவருக்கு எதிராக நந்தியும் எழுந்தருளியுள்ளனர்.இரவு நேரங்களில் நீண்டதூரப் பயணம் செல்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து முந்திரி மாலை அணிவித்து, தீபம் ஏற்றிவழிபட்டு சென்றால், எந்த ஆபத்து இல்லாமல் வழித்துணையாக கால பைரவர் உடன் வருவார் என்பது இங்கு இருப்பவர்களின் நம்பிக்கையாக உள்ளது. நான் சென்று வந்த ஆன்மீக தளங்களில் இன்னும் பிரமிப்பில்இருந்து விலகாமல் இருக்கும் கோவில் என்றால் அது உஜ்ஜைனியில் அமைந்து அருள்பாலிக்கும்கால பைரவர் தான் என சிலிர்ப்புடன் அனுபவத்தைபகிர்ந்து கொண்டார் தே. யாதவ ராமன் அவர்கள்.

மீண்டும் அடுத்த ஒரு ஆன்மீகதகவலுடன் சந்திப்போம்.

யாழினி சோமு

Related Posts