முன்பதிவில் அசத்தும் இந்தியன் 2:  இதுவரை எவ்ளோ தெரியுமா?

முன்பதிவில் அசத்தும் இந்தியன் 2:  இதுவரை எவ்ளோ தெரியுமா?

லைகா தயாரிப்பில்  ஷங்கர் இயக்க, கமல் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் நளை வெளியாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில், சித்தார்த், விவேக், பிராமணன்தான், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

அனிருத் இசையில் பாடல்கள் ஹிட் ஆகி உள்ளன.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து படத்தின் ட்ரைலர், போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் முன் பதிவு வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, இப்படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் ரூ. 3.5 கோடி வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாம்.

இந்தியன் 2 படம், ரசிகர்களின் பேராதரவு பெற்றுள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. அதிரடியான முன்பதிவு வசூல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்து இருக்கிறது.

 

Related Posts