‘வந்தார் சேனாபதி!’: ‘இந்தியன் 2’ பட அதிரடி ட்ரெய்லர் ரிலீஸ்!

‘வந்தார் சேனாபதி!’: ‘இந்தியன் 2’ பட அதிரடி ட்ரெய்லர் ரிலீஸ்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடிக்கும் படம், இந்தியன் 2.   சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் படத்தை தயாரித்துள்ளது.  அனிருத் இசை அமைத்துள்ளார்.  காஜல் அகர்வால் , சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்்ளனர்.

படம், அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந் நிலையில் இந்தியன் 2 படத்திற்கான ட்ரைலர் , இன்று மாலை 7 மணிக்கு வெளியாகியுள்ளது.

2 நிமிடங்கள் 37 வினாடிகள் ஓடக் கூடியதாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி டெரெய்லர்:

டிரெய்லர் அதிரடியாக  உள்ளது. “படிப்புக்கு ஏத்த வேலையில்லை; வேலைக்கு ஏத்த சம்பளம் இல்ல”, “திருட்றவன் திருடிட்டு தான் இருப்பான்” என்று சம காலத்தில் குமுறலாக வெடிக்கின்றன வசனங்கள்.

. “சிஸ்டத்த சரி செய்ய துரும்ப கூட கிள்ளி போட்றதில்ல” என சித்தார்த் சொல்லி முடிக்க அடுத்து கமல், அதிரடியாக என்ட்ரி ஆகிறார். சட்டை கழற்றி, கமல் செய்யும் சண்டைக் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.

“இந்தியன் தாத்தா திரும்பி வரணும்; தப்பு செஞ்சா அதிலிருந்து தப்பிக்க முடியாதுங்குற பயம் வரணும்” உள்ளிட்ட வசனங்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.

“இது இரண்டாவது சுந்திர போர்; காந்தி வழியில நீங்க, நேதாஜி வழியில நான்”, “ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்ற கமல் பேசும் வசனங்கள் செம மாஸாக உள்ளன.

மொத்தத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது, டிரெய்லர்!