பிகில் பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை’’ கட்டுக்கட்டக 65 கோடி..!

பிகில் படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம், அவர் கட்டிய வருமான வரி குறித்து  2ஆவது நாளாக அவரிடம் வருமான வரித்துறையினர்  இன்றும் விசாரணை நடத்தி வருகிறது.  விஜயின் பிகில் படத்தை விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இன்று சோதணை செய்ததில் ஒரே நாளில் 65 கோடி ரூபாய் பணம் சிக்கியிருக்கிறது.

சென்னை பனையூரில் இருக்கும் விஜய்யின் வீட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் வந்த வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  பின்  இரவு 9 மணியளவில் அங்கு அழைத்து வரப்பட்டார் விஜய். அவரிடம்  வருமான வரித்துறையினர் 10 க்கும் மேட்பட்டோர் விசாரணை நடத்தினர்கள்.

அந்த சமயத்தில் பிகில் படத்தில் விஜ்யின் சம்பளம் தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்ததாக கூறுகின்றானர். அதன்பிறகு விசாரணை அதிகாரிகள் 7 பேர்  வெளியேறிய உள்ளனர்.அதன்பிறகு  3 பேர் மட்டும் விஜய்யிடம் விடியும் வரை நடத்தியிருக்கின்றனர்.

 இந்த சூழ்நிலையில் இன்று அதிகாலை மேலும் 6 அதிகாரிகள் விஜய் வீட்டுக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே விசாரணை நடத்திகொண்டு இருக்கும் 3 பேருடன் சேர்ந்து, விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை நடைக்கும் போது விஜய் வீட்டில் அவர் மட்டும் இருந்தார அதைத் தவிர்த்து வேறு யார் இருந்தார்கள் என்ற தகவல் குறித்தோ, பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தோ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இன்று காலை பத்து மணிக்கு ஆர்டர் செய்யப்பட்ட உணவு மட்டும் விஜய் வீட்டிற்கு டெலிவரி வந்துள்ளது.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக  கிடைத்த தகவலின்பேரில், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்கள், திரையரங்குகள், ஏஜிஎஸ் உரிமையாளரான கல்பாத்தி அகோரத்தின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாட்களாக  சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேப்போன்று  பிகில் படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் விநியோகம் செய்த பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான  சென்னை மற்றும் மதுரையில் இருக்கும் வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக நடத்திய சோதனையில் 65 கோடி ரூபாய் பணம் சிக்கியிருக்கிறது. சென்னையில் மட்டும் 50 கோடி ரூபாய், மதுரையில் 15 கோடி ரூபாயும் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுயிருக்கின்றன.

நேற்று வரை ஏஜிஎஸ் மற்றும் அன்புச்செழியன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 24 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது வரை நடத்தப்பட்ட சோதணையில் தற்போது வரை மொத்தம் 89 கோடி பணமாக  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.