விமர்சனம்:  ஹாட் ஸ்பாட் 

விமர்சனம்:  ஹாட் ஸ்பாட் 

‘இரட்டை அர்த்தமல்ல.. நேரடியாக ஒரே அர்த்தத்தைத் சொல்லும் வசனங்கள் இருக்கின்றன’  என ஹாட் ஸ்பாட் பட டிரெய்லர் வெளியானபோதே பரபரப்பும் – கண்டனங்களும் எழுந்தன.

அப்போது படத்தின் இயக்குநர், “முழு பட படத்தையும் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்” என்றார்.

இப்போது படம் வெளியாகிறது. எப்படி இருக்கிறது என்கிற நமது பார்வையை முன் வைப்போம்.

இது அந்தாலஜி வகை படம். அதாவது நான்கு வெவ்வேறு கதைகள்.

 

திரைப்பட இயக்குநர் ஒருவர், தயாரிப்பாளரிடம் நான்கு கதைகளைச் சொல்கிறார். படத்திலும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கே இயக்குநராக நடித்துள்ளார்.  படத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

முதல் கதை..

ஆதித்யா பாஸ்கர் –  கௌரி கிஷன் ஆகியோர் காதலர்கள். ஆணாதிக்கம் – பெண்ணுரிமை என்று போகிறது கதை. ஒரு கட்டத்தில், பெண் ஆணுக்கு தாலி கட்டப் போக.. பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த கதை வரவேற்கத்தக்கது.

இரண்டாவது கதை..

சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் நடித்திருக்கும் இந்த கதை அதிரடியாக ஆரம்பித்து.. அதே வழியில் பயணிக்கிறது. ஆனால் இந்த கதைக்கு என்ன முடிவு சொல்வது என்பதில் இயக்குநருக்கே குழப்பம் இருப்பதை  புரிந்துகொள்ள முடிகிறது.

 மூன்றாவது கதை..

அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன். காமம் தலைக்கேற, அலுவலக கழிவறையிலேயே சுய இன்பம் செய்கிறான். இது பிறருக்கு தெரியவர.. வேலையைவிட்டு நீக்கப்படுகிறான்.

அடுத்த வேலை கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று யோசித்தவன்..  விபசாரகன் ஆகிறான்.

இதனால் ஆண் விபராசர படு அபத்தம். இதனால் அவன் காதலும் தோல்வியில் முடிகிறது.

சுபாஷ் – ஜனனி முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

தாயும் மகனும் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்து.. அதனால் ஏற்படும் விளைவுகள்.

நான்காவது கதை..

டிவி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை பங்கெடுக்க வைத்து பாடாய் படுத்துவதை பதிவு செய்திருக்கிறார்கள். சிறப்பு.

கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஆணுக்குப் பெண் தாலி கட்டுவது, பெண்கள் ஓரினச் சேர்க்கை, சகோதர சகோதரிக்குள் காதல்,  சுய இன்பம்,  தாய்க்கும் மகனுக்கும் இடையே பாலியல் ரீதியான குழப்பங்கள், குழந்தைகள் மீது தொடுக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள்.. என்று பல விசயங்களை தொட்டு இருக்கிறார் இயக்குநர்.

இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம். எடிட்டிங்…  இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.

மொத்தத்தில்.. பரபரப்பான கருத்தைச் சொல்லி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எடுத்திருக்கும் படம்.

Related Posts