கை சுருக்கம் நீங்க அழகு பெற எளிய வழிகள்!

   கை சுருக்கம் நீங்க அழகு பெற எளிய வழிகள்!

உடலில் ஏற்படும் அழுக்கு, சுகாதாரம் சம்பந்தப்பட்டது என நினைக்கிறோம். உண்மைதான். அதே நேரம் இது மிகப்பெரிய ஆரோக்கியக் கேடு ஆகும்.

இறந்த செல்களை நீக்குவதில் அழுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய மாக கைகள் பாதிக்கப்படுகின்றன.

பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது இல்லை. தவிர, வயதாகும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.  அதில் ஒன்று தோல் சுருக்கம் ஆகும்.

தவிர சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கைகளில் தோல் சுருக்கம் ஏற்படும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும்.

வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்க முடியும். மேலும் சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் கலக்கிக் கொள்ளுங்கள். பிறகு, கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.  காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிட வேண்டும்.

இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.