எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ட்ரெய்லர்!

எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ட்ரெய்லர்!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டில்லிபாபு தயாரிக்க,  பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இது. கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர்.

பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்து இருக்கிறார்.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கிராமம், காடு, யானை என தொடரும் ட்ரெய்லர் கதையை கணிக்க முடியாத வகையில் கட் செய்யப்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

யானையை வைத்து காரியம் சாதிக்க ஜி.வி.பிரகாஷும், தீனாவும் திட்டம் போடுகின்றனர். . அது குறித்த விசயம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு உள்ளது.

இடையில் பாரதிராஜா வந்து செல்கிறார். இது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

பின்னணி இசை ஈர்க்கிறது.

‘கள்வன்’ படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர் வீடியோ:

 

 

Related Posts