குரூப் 1 தேர்வு முடிவு: சைதையாரின் மனிதநேயம் பயிற்சி மைய மாணவர்கள் சாதனை!

குரூப் 1 தேர்வு முடிவு: சைதையாரின் மனிதநேயம் பயிற்சி மைய மாணவர்கள் சாதனை!

திரு.சைதை துரைசாமி, திருமதி மல்லிகா துரைசாமி, திரு.வெற்றி துரைசாமி மற்றும் திருமதி வசுந்தரா வெற்றி ஆகியோரால் சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் பொருட்டு கடந்த 2005ஆம் ஆண்டு “மனிதநேய அறக்கட்டளை” தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சாதி, மத பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற பல மாணவ – மாணவியர்கள் அரசுப் பணி பெற்றுள்ளனர்.

“மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம்” மூலம், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியர்களும் இந்திய அளவில் உயர்பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டுமென்கிற உயர்ந்த நோக்கோடு கடந்த 17 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ், ஐஆர்எஸ், இந்தியவனத் துறை பணி ஆகிய பதவிகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் -I, II, IIA (DC, DSP, DRO, DEO, CTO), SUB-INSPECTOR, A.E (HIGHWAYS, RURAL DEVELOPMENT & PANCHAYAT RAJ, PWD (CIVIL, ELECTRICAL) போன்ற பதவிகளுக்கும் இதுவரை 3788க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பணியாளர் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் பிற மத்திய அரசு பணிகளுக்கான தேர்வினை நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளை கொண்டது இந்த தேர்வு ஆகும்.

குரூப்-4 (VAO, Junior Assistant – Security, Non Security, Bill Collector – Grade – 1, Field Sureyor, Draftsman, Typist, Steno-Typist) போன்ற பதவிகளில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் 175 சாதி பிரிவுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளனர்.
இது குறித்து மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சைதை துரைசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தனித் திறமை பெற்ற மாணவர்கள் எங்கு படித்திருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் தேடிச்சென்று அவர்களுக்கு வேண்டிய உதவியை மனிதநேய அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகின்றது. தகுதியுடைய மாணவர்கள், அவர்களை உருவாக்கிய தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர் ஆகியோருடைய ஆசியுடன் இந்த மாணவர்கள் பெரும் வெற்றியை பெற்று இருக்கிறார்கள். இவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனிதநேயம் பல்வேறு வகைகளில் உதவி புரிந்ததை மனநிறைவோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நேர்மையான அதிகாரிகளை உருவாக்கும் உன்னத பணியில் மனிதநேயம் தொடர்ந்து கடமையாற்றும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 95 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

மாதம் 10,000 ரூபாய் வீதம் 3 மாதங்கள், உதவித் தொகையுடன் கூடிய முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற தயார் செய்யும் பொருட்டு, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, அவர்களுள் 100 மாணவர்களுக்கு  தகுதி, திறன், நுழைவுத் தேர்வு, அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அனுபவம் மிக்க வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி தேர்வு செய்து, முழு நேர பயிற்சி அளித்தோம்.

நுழைவுத்தேர்வில் தகுதிபெற்ற 100 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் மூன்று மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. உதவித்தொகை பெற இயலாத மாணவர்களும், முதன்மைத் தேர்வுக்கான தொடர் மாதிரி தேர்வு மற்றும் வகுப்புகளில் பங்கு பெற்றனர். முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மே இரண்டாம் வாரம் முதல் துவங்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்றது. நேரில் வந்து பயிற்சி பெற இயலாதவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கான பாடத் குறிப்புகள் இணையதளத்தில் பகிரப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர்.நேர்முகத் தேர்விற்கான பயிற்சி துவக்கம்:

முதன்மைத் தேர்வின் முடிவு 07.03.2024 அன்று வெளியிடப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வுகள் (Mock Interview) 10.03.2024 முதல் 25.03.2024 வரை தொடர்ந்து நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகள் மாதிரி நேர்முகத் தேர்வுகள் மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு பேராசிரியர்கள் உளவியல் வல்லுநர்கள் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் இதர உயர் பணியில் பணிபுரிந்த அரசு அலுவலர்கள் கொண்ட வல்லுநர் குழு மாணவர்களின் தனிப்பட்ட தேவை அறிந்து மாதிரி நேர்முகத்தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கி மனித நேயத்தில் மாணவர்களை சிறப்புற பயிற்றுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 28.03.2024 அன்று வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற 31 மாணவ, மாணவியர்கள் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு. சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

TNPSC தொகுதி-1 மற்றும் தொகுதி-4 தேர்விற்கான கட்டணமில்லா இணையவழி மாதிரி தொடர் தேர்வுகள் விரைவில் துவக்கம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள தொகுதி 1 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பாக இணைய வழியாக (Online) கட்டணமில்லா தொடர் மாதிரி தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் மாதிரி பயிற்சி தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 30.03.2024 முதல் மனிதநேய பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.mntfreeias.com) பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு போன் 044 – 2435 8373, 2433 0095, 8428431107 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

Related Posts