‘காந்தாரி’: திரைக்கதை ஆசிரியரான தயாரிப்பாளர் தனஞ்செயன்!

‘காந்தாரி’: திரைக்கதை ஆசிரியரான தயாரிப்பாளர் தனஞ்செயன்!

ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்மானி நடிக்கும் ‘காந்தாரி’ படத்துக்கு, முதன் முறையாக திரைக்கதை எழுதி இருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். படத்தின் மேக்கிங்கை வெளியிடும் நிகழ்வு சென்னையில் நடித்து உள்ளார்.

சினிமாவின் அத்தனை துறையிலும் அனுபவமும் ஞானமும் உள்ளவர் தயாரிப்பாளர் தனஞ்சயென். திரையுலகினரால் ‘சினிமா விஞ்ஞானி’ என்று அழைக்கப்படுபவர்.நிகழ்ச்சியில் பேசும்போது அவர், எழுத்தாளர் தொல்காப்பியனின் கதை ஒன்றைப் படிக்க நேர்ந்து, அது சினிமாவுக்கு ஒத்து வராது என்று கணித்ததையும் ஆனால் அந்தக் கதையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து முழு சினிமாவுக்கான திரைக் கதையாக வசனகர்த்தா ஸ்ரீனி செல்வராஜூடன் சேர்ந்து எழுதி முடித்தேன்.

அந்த நேரம் பார்த்து யாரோ சொல்லி அனுப்பியதைப் போல், ஹன்சிகா மோத்வானியின் தேதிகள் கிடைக்கப்பெற்ற கண்ணன் என்னைச் சந்தித்து “ஏதேனும் கதை இருக்கிறதா..?” என்று கேட்க, இந்தக் கதையை நான் சொன்னேன். கண்ணனுக்குப் பிடித்துவிட்டது. . உடனே அவரை அழைத்துக்கொண்டு ஹன்சிகாவை சந்திக்க மும்பை சென்றோம்.ஹன்சிகாவும் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே படத்துக்கு ஒத்துக் கொள்ள இந்த ப்ராஜெக்ட் உடனே தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஆர். கண்ணனேதான்.

ஹன்சிகா மோத்வானி இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். அதில் ஒரு பாத்திரத்தில் நரிக்குறத்தியாக வருகிறார். அதற்காக நிஜ நரிக்குறவர்களை சந்தித்து ஸ்கிரிப்டில் வரும் வசனங்களை அவர்கள் மொழியில் பெயர்த்து இந்தப் படத்தில் பயன்படுத்தி னோம்.

நான் தயாரிப்பாளராக இருந்தும் ஒரு படம் தயாரிப்பதற்கு முன்பு நிறைய யோசிப்பேன் – கொஞ்சம் பயப்படுவேன். ஆனால் நான் யோசித்து முடிப்பதற்குள் கண்ணன் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் ஒரு படத்தை எடுத்து முடித்து விடுகிறார்..!” என்று மனம் திறந்து தனஞ்செயன் பாராட்டினார் தனஞ்செயன்.

மேலும் அவர், “இந்த காந்தாரி படத்தின் இரண்டாவது பாகமும் எங்கள் கையில் ரெடியாக இருக்கிறது. இந்தப் படம் வென்றால் அந்த வேலைகளை ஆரம்பிப்போம்..!” என்றார்.

பிறகு பேசிய கண்ணன், “நானும் தனஞ்செயனும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் அடுத்த நாளே சேர்ந்து கொள்வோம். ஒரு நாள் நடந்த சண்டைக்கு அடுத்த நாள் நான் மன்னிப்புக் கோருவேன். அவரும் அதை இயல்பாக எடுத்துக் கொள்வார் அல்லது அவர் தரப்பில் தப்பிருந்தால் அதை சரி செய்து கொள்ளக் கேட்பார். அது எல்லாமே படத்தின் நன்மைக்காகத்தான் இருக்கும்..!” என்றார்.
மேலும், “அரண்மனை நான்கு பாகங்கள் எடுக்கப் பட்டத்தைப் போல் காந்தாரியையும் நான்கு பாகங்கள் எடுப்போம்..!” என்றார்.

காந்தாரி மேக்கிங்கை தனஞ்செயன் வெளியிட இயக்குநர் சுசீந்திரன் பெற்றுக் கொண்டார்.

Related Posts