பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்!: த.வெ.க. ஏற்பாடு!

பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்!: த.வெ.க. ஏற்பாடு!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, த.வெ.கழகம் இன்று ஏழை மக்களுக்கு அன்னதானம் இட்டது. இது குறித்து த.வெ.க. விடுத்துள்ள அறிக்கையில், ” தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, சற்றுமுன், “உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு “தமிழக வெற்றிக் கழகம் சார்பாக” திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயில் குளம், வடக்கு மாத வீதியில் கழகப் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்கள் பட்டினி தின ஒருநாள் மதிய உணவு சேவையை துவங்கி வைத்து சுமார் 2000 ஏழை எளிய மக்களுக்கு சமபந்தி உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு, மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Posts