ஃபைண்டர் சினிமா விமர்சனம்

ஃபைண்டர் சினிமா விமர்சனம்

கடலுக்குச் சென்று மீன் பிடித்து, மனைவி மகளை காப்பாற்றி வருகிறார் சார்லி. ஒருகட்டத்தில், பணப்பிரச்சினையை சமாளிக்க, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்று சிறைக்குச் செல்கிறார்.

ஆறே மாதத்தில் அவரை சிறையிலிருந்து மீட்டுவிடுவதாக உறுதியளித்த (நிஜ) குற்றவாளி தரப்பு, கைவிடுகிறது. மனம் வெதும்பி சார்லியின் மனைவியும், மகளும் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். மனைவி இறந்துவிட, மகள் பிழைத்துக்கொள்கிறாள்.

ஆனால் சிறையில் தந்தை, தாயோ மரணமடைந்துவிட்டார்.. ஒற்றை ஆளாய் மீன் வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார். அதே நேரம் தனது தந்தையை சிறையில் இருந்து மீட்க சட்ட உதவி கேட்டு அலைகிறார்.

இன்னொரு புறம், செய்யாத குற்றத்திற்கு சிறை  தண்டனை வகிப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதை முழுநேரப் பணியாக செய்து வருகிறார், சட்டம் பயின்ற  டிடெக்டிவ் வினோத்.

அவரது கவனத்துக்கு சார்லியின் நிலை செல்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது… சார்லி விடுதலை ஆனாரா.. உண்மைக் குற்றவாளிகள் சிக்கினார்களா என்பதே கதை.பீட்டர் என்ற அப்பாவி கதாபாத்திரத்தில் வருகிறார் சார்லி. அவரது நடிப்பைப் பற்றி குறிப்பிட வேண்டியதே இல்லை. ஆனால் இதே போன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. அசத்தலான நடிகரான அவருக்கு விதவிதமான கதாபாத்திரங்களை அளித்து, தமிழ்த்திரையுலகம் அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.

படத்தை இயக்கியிருக்கிற வினோத் ராஜேந்திரன், பிரைவேட் டிடெக்டிவ் ஏஜெண்டாக வருகிறார். இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவரது உதவியாளராக வரும் தாரணியும் சிறப்பாக நடித்து உள்ளார்.

நிழல்கள் ரவி அரசு தரப்பு மூத்த வழக்கறிஞராக வந்து அருமையான நடிப்பை அளஇத்து உள்ளார். அப்பாவியாக.. விபரம் தெரியாமல் விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் இளைஞராக வந்து முத்திரை பதித்து இருக்கிறார் சென்ராயன்.

சார்லியின் மகளாக வரும் பிரணாவும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.

வில்லனாக அறிமுகமாகி இருக்கும் இளைஞர் நாசர் ஈர்க்கிறார். தந்தையை, “ஸாரிப்பா” என்று சொல்லிச் சொல்லியே கொல்லும் காட்சியில் உறைய வைக்கிறார்.சூர்ய பிரசாத்தின் இசை,  பாபு ஆண்டனியின் ஒளிப்பதிவு  ஆகியவை படத்துக்கு பலம். எடிட்டர் தமிழ்க் குமரனும் சிறப்பாக பங்களித்து உள்ளார்.

படம் முழுதுமே எதிர்பாராத திருப்பங்கள் கொண்டதாக.. அடுத்து என்ன.. என்று கேட்கும்படியாக உள்ளது. சிறப்பான இயக்கம்.

சுயாதீன திரைக்கலைஞரான  இயக்குநர் வினோத் ராஜேந்திரனுக்கு பாராட்டுகள்.

ஃபைண்டர்- அனைத்து தரப்பினரும் விரும்பும் த்ரில்லர்.

Related Posts