இந்தியாவை தாக்கிய கொரோனா வைரஸ்’’ மக்கள் அச்சம்

நமது அண்டை மாநிலமான கேரளாவில் சீனாவில் இருந்து  திரும்பிய மாணவர் ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதை உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 107க்கும் மேல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் 6 ஆயிரத்து 78 பேருக்கு  இந்த நோயின் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில்’’ மேலும், அண்டைநாடுகளிலும் 70 பேர் பாதிப்படைந்துள்ளனர். 18  நாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதை உறுதி செய்திருக்கிறது.
ஊஹான் மற்றும் 17 நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு சீன அரசு தடைவிதித்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸையை அந்நாட்டின்  அதிபர் ஜி ஜின்பிங், சாத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் ஊஹான் மாகாணத்தில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட பல மாணவர்கள் தனியாக கண்காணித்து வந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அந்த மாநில அரசு உறுதி செய்துள்ளது. இந்த செய்தியை  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் மட்டும் 800க்கும் மேற்பட்டவர்கள் தீவிர கண்கானிப்பில் இருப்பதாக கூறுயிருக்கின்றனர்.
அந்த மாணவரை மருத்துவமனையில் , தனியாக வைத்து கண்காணிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அந்த மாணவர் ஒரு மாததிற்கு தனி அறையில் யாருக்கும் இந்த வைரஸ் தொற்றதவாறு வைக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு வைரஸ் பாதிப்பு வந்த நிலையில் தமிழ் நாட்டுக்கு வருவதற்கான வாப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர். ஏற்கனவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்னும் கூடுதல் கவனத்துடம் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.