சீரடி சாயி பாபாவின் விரதமுறைகள் என்ன?

 

சாதி மதம் பார்க்காமல் இஸ்லாமியர்கள் உட்பட பல மதத்தினரும் சாய் பாபாவை வணங்கிவருகின்றனர்.

தனது பக்தர்கள் எங்கிருந்து எந்தஇடத்திலிருந்து, தன்னை நினைத்து வணங்கினால், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது உண்மை. சீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரதத்தின் நாம் பார்க்கலாம்.

  • இந்த விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் சாயி நாமத்தை எண்ணி தொடங்கலாம்.
  • ஆண், பெண், யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். 
  • எந்த காரியத்திற்காக அல்லது எந்த வேண்டுதலுக்காக ஆரம்பிக்கிறோமோ, அது வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்று சாய்பாபாவை மனதில் நினைத்துக்கொண்டு  விரதத்தைத் தொடங்க வேண்டும்.
  • சாயி பாபா பூஜை செய்வதற்கு காலை அல்லது மாலை சிறந்த நேரமாகும். இந்த விரதத்தை கடைபிடிக்கும்போது வெறும் வயிற்றுடன் பூஜை செய்யக்கூடாது. பழ,  திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) எடுத்கொண்டு தொடங்கவும்.

 நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை மதியமோ, இரவோ உணவு எடுத்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த  விரதத்தை எடுக்ககூடாது.

ஒரு பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து சுத்தமான  நீரால் துடைத்து சந்தனம், 

குங்குமம் வைத்து திலகம் வைக்க வேண்டும். ஒருவேலை உங்களிடம் சிலையாக  இருந்தால் தங்களால் இயன்ற அபிஷேகத்தைச் செய்யலாம்.

 மஞ்சள் நிறம் கொண்ட மலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவிக்க வேண்டும்.

தீபம், ஊதுபத்தியும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். பிரசாதமாகப் பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து, எல்லோருக்கும்  கொடுத்து கொடுக்கவும்.

ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும்.

முடியாதவர்கள் வீட்டிலேயே சாய்பாபாவின் பூஜையை தொடங்கலாம்.

வெளியூர் செல்வதாகவும் இருந்தாலும், ஒருவேளை உணவு உண்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

பெண்களுக்கு மாத விலக்கு இருக்கம் நேரத்தில் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அடுத்த வியாழக்கிழமை விரதம் இருந்து ஒன்பது வியாழக்கிழமைகளையும் நிறைவு செய்யலாம். 

விரதத்தை 9 வியாழன் கடைபிடித்த பிறகு நிறைவு செய்ய வேண்டும். அன்று குறைந்தது ஐந்து ஏழைகளுக்கு தங்களால் இயன்ற உணவு கொடுத்து உதவலாம்.

அருகில் இருப்பவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு இலவசமாக புத்தகங்கள் கொடுக்கலாம். சாயி புத்தகத்தைக் கொடுக்கும் முன்பு பூஜையில் வைத்து, பிறகு வழங்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது போல் விரதத்தை  நிறைவு செய்தால் நிச்சயமாக  எண்ணிய காரியம்  நிறைவேறும்.  என்பது  சாயி பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கை.