தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையின்போது   வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்தனர். வரலாற்று திரைப்படமாக அதிரடி ஆக்சன் காட்சிகளுடன்  இயக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன்.

 

இந்நிலையில், நேற்று லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த அயலக மொழிப்படம் என்ற விருது கேப்டன் மில்லருக்கு கிடைத்து உள்ளது.

இதே பிரிவில் ஜெர்மனிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி உட்பட மேலும் சில படங்கள் போட்டியிட்டன.  இந்நிலையில் கேப்டன் மில்லர் இந்த விருதை  பெற்றுள்ளது.

தமிழ்த் திரைப்படத்துக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Related Posts