துணை கலெக்டர் பதவியேற்கும் மனிதநேய மையத்தில் படித்த மாணவர்கள் -சைதயார் வாழ்த்து.

துணை கலெக்டர் பதவியேற்கும் மனிதநேய மையத்தில் படித்த மாணவர்கள்  -சைதயார் வாழ்த்து.

மனிதநேய மையத்தில் படித்து குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மையத்தின் தலைவர் மாணவர்களால்  அன்போடு கல்வி தந்தை என்று அழைக்கப்படும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழ் நாடு அரசு தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட பதவிகளில் 95 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது.இதைத் தொடர்ந்து, முதல் நிலை, முதன்மை, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றது.

தேர்வுகளின் தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் சென்னை முன்னாள் மேயரும் கல்வி தந்தை சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய மையத்தில் படித்த மாணவர்கள்  31 மாணவ-மாணவிகள் இடம் பெற்றனர்.

 

இந்த சூழ்நிலையில் சென்னையில் உள்ள தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்  மதிப்பெண் அடிப்படையில் ’குரூப்-1’ பதவிகளுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பணி ஒதுக்கீடு பெற்ற மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களின் விவரம்.

 

சி. அலமேலு,டி.துனு அரவிந்த்,எம்.எம்.டி.கேந்திரிய,பி.ஜார்ஜ்,ஆர். கவுதம், சி.முருகன்,பி.ராம சுந்தரி,டி. ஜெபிகிரேசிய ஆகியோருக்கு துணை கலெக்டர் பதவி கிடைத்துள்ளது. டி.எஸ். ஆதித்யன் எம். இளஞ்செழியன். ஏ.பி. கணேஷ்,கே.விக்னேஷ்,பி. வினோத், பி. சீதாலட்சுமி,என். சதீஷ் கண்ணன்,கே.கேசவன் ஆகியோருக்கு துணை சூப்பிரண்டு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.ஆதித்யன்,ஆர்.பவதாரணி,எம்.மாரிசெல்வி,எஸ். நளினி, எம்.பேச்சியம்மாள்,ஜி.வடிவு,ஆர்.தனலட்சுமி,சி.யுவராஜ்,கே.ஸ்ரீ ஜெய ராதா ஆகியோர் வணிகவரித்துறை உதவி கமிஷனராகவும் ஆர். கருமாரிதாசன்,பி.அஜித் குமார்,சகாய ஆரோக்கியமேரி,பிரான்சிஸ்,ஆஎ.ஜீவிதா ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராகவும்,எஸ்.பாரதி,விஜயலட்சுமி ஆகியோர் ஊரக வளர்ச்சித்துறை  உதவி இயக்குநராகவும், ஆர்.தீபா மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராகவும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை கலெக்டர் பதவி கிடைத்த மாணவர்கள்  நேரில் சென்று கல்வி தந்தை,மனித நேயர்  சைதை துரைசாமி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக சைதையார் வெளியிட்ட அறிக்கையில் மனிதநேயத்தின் அடிப்படை கோட்பாடுகள் தேவைப்படுவோரின் தேவையறிந்து உதவி செய்தல் மற்றும் நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவது போன்ற விழுமங்களை மனதில் கொண்டு சமூக மேம்பாட்டிற்கு தேவையான ஒரு நேர்மையான நிர்வாக  கட்டமைப்பை மனிதநேய மாணவர்கள் உருவாக்குவார்கள் என்ற பெரும் நம்பிக்கையை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Posts