நடிகர்கள் விதார்த், வாணிபோஜன் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி புகார்!

நடிகர்கள் விதார்த், வாணிபோஜன் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி புகார்!

‘திருச்சித்ரம் புரொடக்சன்ஸ்’ சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாக்க, அறிமுக இயக்குனர் எஸ் பி சுப்புராமன் உருவாக்கத்தில் விதார்த், ரஹ்மான், வாணி போஜன்  உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் அஞ்சாமை.

‘நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது’ என்று பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில்,  “நீட் தேர்வை தடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளன.

அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர், புகார் அளித்து உள்ளார்.

இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts