இத்தனை உபாதைகளை தீர்க்கிறதா துளசி?!

இத்தனை உபாதைகளை தீர்க்கிறதா துளசி?!

துளசி என்பது பக்திக்கான செடி மட்டுமல்ல.. அது ஓர் அற்புத  மூலிகை!

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

இதில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என பல வகை  உண்டு.

துளசியால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

@ நமது மூளை சோர்வடையும் போது, புத்துணர்ச்சி அளிக்கும்.

பத்து துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி, இரண்டு ஏலக்காய், இரண்டு டீஸ்பூன் தேன், சிறிதளவு பசும் பால் கலந்து பருகினால் சோர்வு நீங்கி மூளை சுறுசுறுப்பு அடையும்.

*துளசியை குடிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதாலும், குடிப்பதாலும் தொண்டைவலி, அழற்சி, புண் போன்றவை நீங்கும். மேலும் ‘டான்சிலை’யும் கரைக்கும்.

*துளசி ஊறவைத்த தண்ணீரைப் பருகினால், இருமல், இளைப்பு, காசநோய், காய்ச்சல் தீரும்.

*ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவு துளசி விதைகளை போட்டு ஊறவைத்து, அந்த நீரை குடித்து, விதைகளை மென்று சாப்பிட்டால் வயிறு சம்பந்த உபாதைகள் தீரும்.

*சுடுநீரில் ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாறு, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.

இப்படி பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக துளசி விளங்குகிறது.