நடிகை கோமல் சர்மாவுக்கு யு.ஏ.இ. நாட்டின் கோல்டன் விசா! நீங்கள் பெறுவது எப்படி?

நடிகை கோமல் சர்மாவுக்கு யு.ஏ.இ. நாட்டின் கோல்டன் விசா! நீங்கள் பெறுவது எப்படி?

நடிகை கோமல் சர்மா ( வயது 34),  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான, ‘  சட்டப்படி குற்றம்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில  தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார்.

தற்போது அவர்  ஐக்கிய அரபு நராட்டின் ( யு.ஏ.இ.)  உயரிய விசாவான, கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.

கோல்டன் விசா என்றால் என்ன?

2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த விசா அமல்படுத்தப்பட்டது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், க்டர்கள், இன்ஜீனியர்கள், நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், நல்ல திறமை படைத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்க முடிவெடுக்கப்பட்டது. தங்கள் நாட்டைவிட்டு அறிவும் திறமையும் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசா வழங்கப்படுவதின் முக்கிய நோக்கம்  என்றார், அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும்.

கோல்டன் விசாவால் என்ன பயன்?

இதை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும். கிட்டதட்ட அந்நாட்டின் குடிமகன் அந்தஸ்து வழங்கப்படும். (சொந்தநாட்டின் குடியுரிமையையும் விட்டுக்கொடுக்க வேண்டியது இல்லை)

கோல்டன் விசா பெற தகுதி என்ன?

ஆகச்சிறந்த மருத்துவர் – பொறியாளர் போன்றவர்களுக்கு கோல்டன் விசா அளிக்கப்படும் என அந்நாடு அறிவித்தாலும் அதைவிட முக்கியமான நிபந்தனைகள் உண்டு. பெரும் அளவிலான தொழில் முதலீடு அந்நாட்டில் செய்ய வேண்டும் அல்லது பெரும் பொருட் செலவில் அங்கே வீடு ( சொத்து) வாங்க வேண்டும்.

அந்நாட்டின் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச காலத்திற்கு நீங்கள் முதலீட்டை பராமரிக்க வேண்டும்.

கோல்டன் விசாவை பெறுவது எப்படி?

இணையத்தில் இதற்கான அப்ளிகேசனை அந்நாடு உலவவிட்டுள்ளது. அதைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். தேவையான தகவல்கள் மற்றும் சான்றுகளை இணைக்க வேண்டும்.

இதுவரை கோல்டன் விசா பெற்ற இந்திய பிரபலங்கள் யார், யார்?

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தி திரையுலக நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பிருத்திவிராஜ், பாடகி சித்ரா இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, தமிழ் நடிகை மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர்.

சமீபத்தில்  நடிகர் நடிகர் ரஜினிகாந்த்தும் கோல்டன் விசா பெற்றார்.

கேள்விகள்:

  1. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா என அந்நாடு அறிவித்தது. ஆனால் திரை நட்சத்திரங்களுக்கு, கோல்டன் விசா அளிக்கப்படுவதே செய்தியாக வெளியாகிறது. ஒருவேளை திரை நட்சத்திரங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா அல்லது மற்ற துறையினருக்கு கோல்டன் விசா அளிக்கப்பட்டு அது செய்தியாக முக்கியத்துவம் பெறுவதில்லையா?
  1. இந்த விசாவை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பதே அந்த நாடு வகுத்திருக்கும் விதி. ஆனால் “இன்னாருக்கு யு. ஏ.இ. அரசால் கோல்டன் விசா அளிக்கப்பட்டது” என்றே செய்திகள் வெளியாகின்றன.  எது சரி?

விளக்கம்:

நமது தஞ்சையைச் சேர்ந்த தொழிலதிபர்  ராமமூர்த்தி பொன்னுசாமி தற்போது யு.ஏ.இ. நாட்டில் வசிக்கிறார். இவர் கோல்டன் விசா பெற்றவர்.

இவர், “வெளிநாட்டில் உள்ள  மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கு அப்பளை செய்தால் கிடைக்கும், மேலும் சம்பளம் நமது நாட்டின் மதிப்பில் கிட்டத்தட்ட மாதம் ஏழு லட்சத்திற்கு மேல் இருந்தால் அப்ளை செய்யலாம், ஐந்து கோடி மதிப்பில் வீடு வாங்குபவர்களும் அப்பளை செய்யலாம். நடிகர்களுக்கு கொடுப்பது இரண்டு விதத்தில் கிடைகிறது. இங்கு வீடு வாங்குபவர்களுக்கும் அல்லது அவரினை நாமினேட் செய்து அப்ளை செய்கிறார்கள் அவர்களுக்கு சுற்றுலாவை கருத்தில் கொண்டும் மற்றும் சில பயன்களை பொறுத்து கோல்டன் விசா வழங்குகிறார்கள். சோசியல் மீடியாவில் இன்புலேன்சர் களுக்கும் வழங்கி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க..  https://www.goldenvisauae.net/

 

 

Related Posts