நடிகர் எஸ்வி சேகருக்கு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் வாழ் நாள் சாதனையாளர் விருது!

நடிகர் எஸ்வி சேகருக்கு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் வாழ் நாள் சாதனையாளர் விருது!

நடிகர் எஸ்வி சேகருக்கு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.[1] இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் பன்முகத் திறமை உள்ளவர் எஸ்.வி.சேகர். இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும்,  ஏ.சி. மற்றும்பிரிஜ் டெக்னாலஜியில் பட்டயப்படிப்பும்  படித்தவர். இவர் சிறந்த ஒலிப்பதிவாளர். அகில இந்திய வானொலியில் இவரது  ஆக்கங்கள் பல ஒலிபரப்பாகி உள்ளன. நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியவர்.தமிழின் முதல் தொலைக்காட்சியான பொதிகையில் ஆரம்ப நாட்களிலேயே இவரது படைப்புகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.  இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

நாடகத்துறையில் பல்வேறு சாதனைகள் செய்தவர்.  1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றி உள்ளார். கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா உள்ளிட்டோரை கலை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர இவர்தான்.

திரைப்படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் ஏராளமாக நடித்து உள்ளார்.

முதன் முதலாக முழுதும் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட “அமெரிக்காவில் அருக்கானி” தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர். தன்னுடைய “பெரியதம்பி” நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றிகனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார்.

64 வருட  நாடகம். 7000 மேடை
54 வருடம் சினிமா 92 படங்கள்
45 வருடம் டெலிவிஷன் அனுபவம்.
இப்படி சிறப்பு பெற்ற எஸ்.வி.சேகருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில்,  அவருக்கு, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மைலாப்பூர் பாரதீய வித்யா பவன் அரங்கில் நடந்த இதற்கான விழாவில் ஓய்வு நீதிபதி ஜகதீசன், நல்லி குப்புசாமி செட்டியார், கவிதாலயா கிருஷ்ணன், பவன் ராமசாமி  ஆகியோர் விருதினை வழங்கினர்.

எஸ்.வி.சேகர் பெறும் 16 வது வாழ் நாள் சாதனையாளர் விருது இது! 

Related Posts