‘விஜயை போட்டியாக நினைத்தால் மரியாதை இல்லை!’:  சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு ரஜினி முற்றுப்புள்ளி

‘விஜயை போட்டியாக நினைத்தால் மரியாதை இல்லை!’:  சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு ரஜினி முற்றுப்புள்ளி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசி இருந்தார்.

“தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு முன்னால் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என என்னை சொல்லும்படி சொன்னார்.

அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால், உழைப்பால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால் அது அவருக்கும் மரியாதை இல்லை.

தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், ‘காக்கா, கழுகு’ கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்” என்று பேசினார்.

 

Related Posts