ரஜினி, மன்சூர் வழியில் சிங்கம்புலி! ‘ஹரா’ விழாவில் அதிர்ச்சி!

ரஜினி, மன்சூர் வழியில் சிங்கம்புலி! ‘ஹரா’ விழாவில் அதிர்ச்சி!

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்க, விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், வெள்ளி விழா மோகன் நாயகனாக நடிக்கும் படம் ஹரா.

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசர் வெளியீட்டு விழா & டீசர்:

https://tamilankural.com/actor-mohan-haraa-teaser/

விழாவில் இயக்குநர் நடிகர் சிங்கம் புலி பேசியதாவது:

“அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் ஒரு விழாவில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இந்தப்பட வாய்ப்பு, நமஸ்காரம் சரவணன் எனும் நண்பரால் வந்தது. அதுவும் இப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் முந்தைய படமான, பவுடர் படத்தின் மூலம் கிடைத்தது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போனால் இயக்குநர் மூன்று கேமரா வைத்து காட்சிகளை எடுப்பார், வித்தியாசமாக இருக்கும். அது தான் அவர் திறமை.

இயக்குநர் மிகப்பெரிய ஆக்சிடெண்டை தாண்டி வந்திருக்கிறார். ஹரா மாதிரி இன்னும் நிறைய படங்கள் அவர் எடுக்க வேண்டும். நல்ல உழைப்பாளி அவர்.

ஹரா படத்தின் டீசர் பார்த்தேன் . 43 ஷாட்கள் உள்ளன.  பார்க்க அட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துகள்” என்ற சிங்கம்புலி, அதன் பிறகு விவகாரமாக பேச ஆரம்பித்தார்:“மேடையில் எனக்கு ஒரு ஓரமாக சீட் போட்டுவிட்டார்கள். ஹீரோயின் பக்கத்தில் அமர வாய்ப்பு கிடைத்து இருந்தால், அவரிடம் கொஞ்ச் பேசியிருப்பேன். என்ன பெரிதாக பேசிவிடப்போகிறேன்… நீங்க எந்த ஊரு, நான் இந்த ஊரு என ஏதாவது பேசி இருப்பேன்.

இப்படத்தில் நடித்துள்ள அனுமோல் உடன் அயலி செய்தேன். இங்கு அவரிடம் பேசலாம் என நினைத்தேன்.  ஆனால் டிரெய்லரில் ஒரு உதை விடுகிறார் பாருங்கள்… அதைப் பார்த்தவுடனே அப்படியே வீட்டுக்குப் போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன்” என்றார் சிங்கம்புலி.

ஜெயிலர் பட விழாவில் பேசிய அந்தப் படத்தின் நாயகன் ரஜினி, “நாயகியுடன் குத்தாட்டம் போட முடியாமல் போய்விட்டது, அவ்வளவு ஏன்.. காம்பினேசன் சீனே இல்லை..” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அதே போல, லியோ படம் குறித்து அதில் நடித்த மன்சூர் அலிகான், “லியோவில் நடித்த த்ரிஷாவை பலாத்காரம்.. அதாவது காட்சியில்.. நடிக்க முடியாமல் போய்விட்டது” என்று பேசி பிறகு மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் மூத்த நடிகரான சிங்கம்புலியும் இதே பாணியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.