“பேசாத குழந்தை தமிழ் மருத்துவத்தால் பேசியது!” : தந்தை வீடியோ

“ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு ஏழு வயது வரை பேசாத குழந்தை,  கோயம்பேடு ரத்னா மருத்துவமனையில், தமிழ் மருத்துவத்தால் பேச ஆரம்பித்துவிட்டது; தனது தேவைகளை தானே நிறைவேற்றிக்கொள்கிறது.  இப்போது அவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டோம்”  என தந்தை நெகிழ்ச்சி – மகிழ்ச்சியுடன் வீடியோ பகிர்ந்துள்ளார்.
 
இது குறித்து அவர் பேசியதாவது:
 
“எனது இரண்டாவது மகள் மூன்று வயது வரை  பேசவில்லை.  ‘லேசாக ஆட்டிசம் இருக்கிறது..    தெரபி தேவை’ என்றார்கள்.  பல வித சிகிச்சைகள் எடுத்தோம்…. எங்கெங்கோ சென்று வந்தோம். பலனில்லை.
ரத்னா மருத்துவமனையில் தமிழ் மருத்துவத்தை முயற்சிக்கலாம் என நினைத்தேன். ஆனால், ‘ இங்கும் ஆட்டிசம் குணமாகாது.. கட்டணம் மிக அதிகமாக இருக்கும்’ என சிலர் சொன்னார்கள்.
 
ஆகவே தயங்கினேன்.  பிறகு,  ‘எவ்வளவோ மருத்துவம் பார்த்தாயிற்று.. இதையும் முயற்சிப்போமே’ என நினைத்தேன். கடந்த வருடம்.. என் மகளின் ஏழாவது வயதில் இங்கே ரத்னா தமிழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன்.
 
இங்கே அளிக்கப்பட்ட மருந்தினை மகளுக்கு அளித்தேன்.  மருந்து கசப்பாக இருக்கும் என்பதால் அவள் சரியாக சாப்பிடவில்லை.  25 சதவிகிதம்தான் சாப்பிட்டு இருப்பாள். 
ஆனாலும் பெரிய அளவில் முன்னேற்றம். 
 
இப்போது நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாள்.. எதையும் புரிந்துகொள்கிறாள். பள்ளிக்கு அனுப்பிவிட்டோம்.
 
ஆரம்பத்திலேயே ரத்னா மருத்துவமனையில் தமிழ் வழி சிகிச்சை எடுத்திருக்கலாமே என தோன்றுகிறது” என  நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்டு இருக்கிறார்அந்த தந்தை.
 
மேலும் அவர், “இப்போதுதான் மக்கள் தமிழ் மருத்தவம் நோக்கி வருகிறார்கள். நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை. இப்போது நேரடியான அனுபவத்தில்.. இது சரியான வழிமுறை என்பதை உணர்ந்தேன். எனக்கு ஒரு பிரச்சினை. அதையும் தமிழ் மருத்துவத்தால்தான் போக்க முடிந்தது” என்றார்.
 
ரத்னா தமிழ் வழி மருத்துவ சிகிச்சைக்கு தொடர்பு கொள்ள: 9092888888
 
 
அந்த வீடியோ..