டாக்டர் டூமை வீழ்த்த ஒன்றிணையும் சூப்பர் ஹீரோ படை… மிரட்டலாக வெளியானது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர்!

டாக்டர் டூமை வீழ்த்த ஒன்றிணையும் சூப்பர் ஹீரோ படை… மிரட்டலாக வெளியானது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர்!

உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முன்பதிவில் சாதனை படைத்து வரும் இப்படத்தின் புதிய டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

மார்வெல் உலகின் மிக வலிமையான வில்லனாக உருவெடுத்துள்ள டாக்டர் டூமை எதிர்கொள்ள, அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் ஆகிய நான்கு பிரம்மாண்டப் படைகளும் ஒரே திரையில் கைகோத்துள்ளன. மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள், தங்களது இருப்புக்கே ஆபத்தாக வந்துள்ள பேராபத்தை முறியடிக்க நடத்தும் யுத்தமே இப்படத்தின் மையக்கரு.

ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் மெக்ஃபீலி, மைக்கேல் வால்ட்ரான் திரைக்கதை அமைத்துள்ளனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிட்டோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, டாம் ஹிடில்ஸ்டன், சானிங் டாட்டம், சிமு லியு, செபாஸ்டியன் ஸ்டான், லெட்டிடியா ரைட், இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் அணிவகுத்துள்ளது.

அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது வரும் டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் இப்படம் கோலாகலமாக வெளியாகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், இன்பினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்பங்களில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விஷுவல் விருந்து படைக்கத் தயாராக உள்ளது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’.

Related Posts