துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’: ப்ரஸ் மீட் ஹைலைட்ஸ்!
துல்கர் சல்மான் நடிப்பில் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படத்தின் தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்து கொண்ட முக்கிய விவரங்கள்:
கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா வழங்கும், லைட்பாக்ஸ் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
-
பாலாஜி வேணுகோபால் பெரிய கனவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவளிப்பதே இந்தப் படத்தின் முக்கிய நோக்கம். இயக்குநர் பவனின் நல்ல நோக்கமும், ஸ்வப்னா சினிமா மற்றும் குன்னம் குடும்பத்தினரின் கூட்டு முயற்சியும் இப்படத்தைச் சிறப்பாக்கியுள்ளது என்றார்.
-
சின்னி ஜெயந்த் இந்தப் படத்தில் பேராசிரியராக நடித்துள்ளேன். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லும் அருமையான படம் இது. துல்கர் சல்மானின் அர்ப்பணிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றார்.

-
சாத்விகா வீரவல்லி இது எனது முதல் திரைப்படம். துல்கர் சல்மான் போன்ற திறமையான நடிகருடன் பணியாற்றியது பெரிய அனுபவம். அல்லு அரவிந்த் சார் என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்ததற்கும், படப்பிடிப்பில் உதவிய சின்னி ஜெயந்த் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றிகள் என்றார்.
-
ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே இது இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான நவீன கிளாசிக் படமாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்தது. துல்கர் சல்மானின் கதைத் தேர்வு எப்போதும் சிறப்பானது. குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும் என்றார்.
-
அல்லு அரவிந்த் சென்னையுடன் எனக்கு நீண்ட தொடர்புண்டு. 2022ஆம் ஆண்டில் இப்படத்தின் கதையைக் கேட்டவுடனேயே தயாரிக்க முடிவு செய்தேன். கிராமத்துப் பெண் ஒருவனின் கனவையும், அவளுக்குக் கிடைக்கும் ஆதரவையும் பேசும் இப்படம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

துல்கர் சல்மான் ‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையைக் கேட்டபோது வேறு யாரிடமும் சென்றுவிடக் கூடாது என்று நினைத்தேன். இது பெண்களின் கனவுகளையும் குடும்பத்தின் ஆதரவையும் பேசும் படம். பத்திரிகையாளர்கள் எப்போதும் எனக்குத் தந்துவரும் ஆதரவிற்கு நன்றி என்றார்.

