காதலில் நல்லது, கெட்டது கிடையாது! விஜய்க்கு ‘மௌன மொழிகளில்’ சுட்டிக்காட்டிய திருமா!
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள செம கமர்ஷியல் எண்டர்டெயினர் படம் தான் ‘மௌன மொழிகள்’. பிரபல பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ ஹீரோவாகவும், அர்ச்சனா ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா திரையுலகப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் சூழ வேற லெவலில் நடந்து முடிஞ்சிருக்கு! காதல் மற்றும் நகைச்சுவையை மையமா வச்சுக் கலக்கலாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 27-ம் தேதி தியேட்டர்களை அதிர வைக்க வருது!
இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் கலகலப்பான பேச்சு:
பாடகர் கானா பாலா:
-
‘மௌன மொழிகள்’ படத்துல ஷாகிர் மனோ செம கலக்கலாக நடிச்சிருக்காரு. மனோ அண்ணன் எப்பேர்ப்பட்ட சிம்மக் குரலோன் என்பது ஊருக்கே தெரியும், இப்போ அவரோட பையனும் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்காரு.
-
இந்தப் படத்துக்காக நான் ரெண்டு பாட்டு பாடியிருக்கேன்; பாடல்களும் இசையும் இளசுகளைக் கட்டாயம் ஈர்க்கும்.
-
சினிமாவுக்குப் பின்புலம் ஒருவேளை தொடக்கத்துல கை கொடுக்கலாம், ஆனா திறமைதான் ஒருவனை உச்சத்திற்குக் கொண்டு போகும்; அந்த வகையில ஷாகிர் மனோகிட்டே டெபனட்டா திறமை இருக்கு, அவர் இன்னும் பல உயரங்களுக்குப் போகணும்னு வாழ்த்துகிறேன்.
இசையமைப்பாளர் சிற்பி:
-
‘மௌன மொழிகள்’ என்ற தலைப்பே ரொம்ப ரம்மியமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கு; எந்தவொரு பிரச்சினைக்கும் அமைதியே பெரிய ஆயுதம்.
-
மனோ சார் கிட்டேருந்து இதுவரைக்கும் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் வந்திருக்கு; அவர் கடவுள் நமக்குக் கொடுத்த ஒரு கிஃப்ட்.
-
அவரோட மகன் ஷாகிர் மனோ ‘பட்டாக்கத்தி’ படத்திலயே கலக்கினாரு, இப்போ இந்தப் படத்துல டான்ஸ், ஆக்ஷன், எமோஷன்னு எல்லா ஏரியாவிலும் அடிச்சுத் தூக்கியிருக்காரு.

பின்னணிப் பாடகர் மனோ:
-
இந்த விழாவைச் சிறப்பிக்க வந்த தொல். திருமாவளவன் ஐயா, கானா பாலா தம்பி மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
-
ஒரு படம் திரைக்கு வருவதற்குப் பின்னால் எத்தனை பேரோட கண்ணீரும் வியர்வையும் இருக்குன்னு எனக்குத் தெரியும்; ஊடக நண்பர்களும் ரசிகர்களும் இந்தப் படத்துக்குத் தங்களது முழுமையான சப்போர்ட்டைக் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன்:
-
பிஸியான அரசியல் பணிகளுக்கு நடுவிலும் இந்த விழாவுக்கு வந்து கலந்துகிட்டு படக்குழுவை வாழ்த்திய திருமாவளவன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
-
தமிழ்நாட்டில் சிறிய பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற அரசு மானியம் ரொம்பவே முக்கியம்; கலைஞர் காலத்தில் தொடங்கிய இந்த மானியத்தை ஆண்டுதோறும் குறைந்தது 100 படங்களற்காவது வழங்க வேண்டும் என்று தம்பி விஜய் அவர்களின் அரசாங்கத்திற்கு திருமாவளவன் மூலம் கோரிக்கை வைக்கிறேன்.
இசையமைப்பாளர் நள இளந்திரையன்:
-
இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களின் அர்ப்பணிப்புதான் இந்த விழா இவ்வளவு பிரம்மாண்டமாக நடக்கக் காரணம்.
-
எங்க வீட்டுலேயே வச்சு மியூசிக் கம்போசிங் பண்ணி, பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தூங்காமல் இந்தப் படத்துக்காக உழைச்சிருக்கோம்; அந்த உழைப்புக்குத் திரையில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இயக்குநர் ஏ.சி. சௌந்தர்:
-
தயாரிப்பாளர் என்மேல் வச்ச நம்பிக்கையால்தான் இந்த மேடையில் நான் நிற்கிறேன்; மீடியம் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பெரிய லெவலில் பேசப்படணும்.
-
மனோ சார், திருமாவளவன் ஐயா, கானா பாலா, சிற்பி சார்னு எல்லாரும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம எங்களுக்காக நின்றிருக்காங்க; வருகிற நவம்பர் 27-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தைத் தியேட்டருக்குப் போய் பார்த்து செமத்தியா வெற்றி பெறச் செய்யுங்க.
தொல். திருமாவளவன்:
‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். பாடகர் மனோ அவர்களின் மகன் ஷாகிர் மனோ, கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது.
சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.
திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்டும்.
காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல், நாடக காதல் என்பெதெல்லாம் கிடையாது.
மேலும், சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.கே. அன்புசெல்வன் முன்வைத்துள்ளார். ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன்!” என திருமாவளவன் பேசினார்.
அவரது பேச்சில், “காதலில் நல்ல காதல், கெட்ட காதல், நாடக காதல் என்பது கிடையாது” என பேசியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
இன்னொரு விசயம்… ” தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வையுங்கள். அதற்காக நாங்கள் போராடியிருக்கிறோம்” என படக்குழுவினரை அவர் பாராட்டியதும் வரவேற்கத்தக்கது. இந்த நிலையை அவர் முதலமைச்சர் விஜய்க்கு சுட்டிக்காட்டியதாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.
கடந்த காலத்தில் திமுக ஆட்சியில், தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்த க்கது.
இதையே திருமாவளவன், விஜய்க்கு சுட்டி காட்டி இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அவர் தீவிரமாக ஆதரிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ்மோர்’, ‘பிரண்ட்ஸ்’, ‘யூத்’ என ஆங்கிலத் தலைப்புப் படங்களில் நடித்தார். அந்தக்காலங்களில் அவர் பெரிய ஹீரோ இல்லை; ஆகவே, அவரைப் பொறுப்பாக்க முடியாது.
ஆனால், பெரிய அளவில் வளர்ந்த பிறகு, தயாரிப்பாளர் உள்ளிட்டோரைத் தானே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வந்த பிறகும் ஆங்கிலத் தலைப்புகளைத்தான் வைத்தார். கடந்த சில வருடங்களிலேயே ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’, ‘கோட்’ என்பவை இதற்கு உதாரணம்.
பிறர் நடித்த படங்களில் 2025, 2026ல் டிராகன், டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ, மெட்ராஸ் மேட்னி, 3பிஹெச், பேட் கேர்ள், வித் லவ், லாக்டவுன், ஹாட்ஸ்பாட் டூ மச், ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட படங்கள் ஆங்கில தலைப்பில் வந்தன.
சில நாட்களுக்கு முன் சீன் நேற்றும் இன்றுமாக பிளாக் கோல்ட், ஃபிளாக், ஜான் டோ ஆகிய படங்கள் ஆங்கில தலைப்பில் வெளியாகி இருக்கின்றன.
இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் திருமாவளவன் பேசி இருப்பார்.
பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று!

