தனுஷின் ஓம் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்!

தனுஷின் ஓம் படத்தை ஐரோப்பியாவில் விநியோகம் செய்யும் ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்!

இந்தியத் திரையுலகின் எல்லைகளை உலகளாவிய அளவில் விஸ்தரிக்கும் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்களான தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்திருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது  ‘ஓம்’  திரைப்படம்.

இப்படம் ஐரோப்பிய நாடுகளில் திரையரங்குகளில் ரிலீஸாகத் தயாராகி வருகிறது. இதற்கெனத் தடம் பதித்துள்ள ‘ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ்’ (Future Run Up Films) நிறுவனம், ‘யுனைடெட் ஃபிலிம்ஸ் யூரோப்பா’ (United Films Europa) உடன் கைகோர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படைப்புகளை ஐரோப்பிய ரசிகர்களின் மனங்களைக் கவரும் வகையில் நேரடியாகத் திரைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மெகா கூட்டணியின் முதல் பாய்ச்சல், போலந்து நாட்டில் இருந்து அதிரடியாகத் தொடங்குகிறது. சர்வதேச அளவில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகச் சிறந்ததொரு சந்தையை உருவாக்கி, உலக அரங்கில் நமது சினிமாவின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இந்த லட்சியப் பயணம், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸின் சினிமா வரலாற்றில் ஒரு பொன்னான மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது

Related Posts