LOVE or LIFE? GenZபுள்ளிங்கோ பார்க்க வேண்டிய ‘LOVE MATTER’!
காதலிக்கிற வயசுல வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியற வயசுல காதல் இருக்காது… இந்த இரண்டையும் சரியா புரிஞ்சுகிட்டு வாழ்க்கையை எப்படி வாழணும்னு இன்றைய GenZ தலைமுறைக்கு அவங்க ஸ்டைலிலேயே சொல்ல வருகிற திரைப்படம்தான் ‘லவ் மேட்டர்’!
ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரிக்க, மகாதாரா பகவத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் பெரிய ஹைலைட்டே இதன் இசையும் பாடல்களும்தான். இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற அட்டகாசமான பாடல் உருவாகியுள்ளது. இளைஞர்களை ஆட்டம் போட வைக்கும் இந்தப் பாடலோடு சேர்த்து, இப்படத்தில் ராஜ்பிரியன் மொத்தம் இரண்டு பாடல்களைப் பாடுகிறார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் முதல் பாடலான “ஆரம்பம் ஆரம்பம்” பாடலை பிரபல பாடகர் எஸ்.என். சுரேந்தர் பாடி அசத்தியுள்ளார்.
நடிப்பைப் பொறுத்தவரை, இப்படத்தின் மூலம் இயன் கதாநாயகனாகவும், அபிநயா கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இயக்குநர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஸ்ரீவி, திலீப், ஆர்.ஜே. பொற்கொடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியமான சிறப்பு என்னவென்றால், இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்பு! இயக்குநர் மகாதாரா பகவத், இன்ஸ்டாகிராமில் நாயுடன் வீடியோ போட்டு ‘அன்பு சார்’ எனப் பிரபலமான தயாரிப்பாளர் செல்வ அன்பரசன், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் மற்றும் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்த டீமும் திரைப்படக் கல்லூரி மாணவர்களே. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் கவனித்து வருகிறார். இளமையும் துள்ளலும் நிறைந்த இந்தக் கூட்டணியின் ‘லவ் மேட்டர்’ நிச்சயம் இளசுகளின் மனதைக் கொள்ளையடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

