சசிகுமார் – ஹரி சந்தோஷ் கூட்டணியில் டிரைடென்ட் ஆர்ட்ஸின் குடும்பத் த்ரில்லர்!
தமிழ் திரையுலகில் தொடர் வெற்றிப் படைப்புகளை வழங்கி வரும் முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனின் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், தனது 22வது பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனரில் சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோருடன் இணைந்து ஆர். ரவீந்திரன் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த விறுவிறுப்பான குடும்பத் த்ரில்லர் திரைப்படத்தில், ரசிகர்களின் அன்பு நாயகன் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராகக் காலடி எடுத்து வைக்கிறார்.
இப்படத்தில் சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர், ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, ஏ.எல். தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் மற்றும் வசந்தி குரு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சஸ்பென்ஸ் நிறைந்த குடும்பத் த்ரில்லர்!
சென்னையில் படப்பிடிப்பு கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஹரி சந்தோஷ், “இது குடும்ப உணர்வுகளும் த்ரில்லர் அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு புதுமையான கதைக்களம். தமிழ் திரையுலகில் எனது முதல் அடியை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் சாருடன் இணைந்து தொடங்குவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது,” எனக் கூறி எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளார்.
மிரட்டலான தொழில்நுட்பக் கூட்டணி:
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், துரைராஜ் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். பாடல்களைக் கார்த்திக் நேத்தா எழுத, வசனங்களை மந்த்ரா அமைத்துள்ளார். கிருஷ் ஜே நாக்ரேச்சா இணை தயாரிப்பாளராகவும், சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.
குடும்ப உணர்வுகளுடன் கூடிய த்ரில்லர் அனுபவத்தைத் தரவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்துத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்!

