‘வர்ண கதைகள்’: காமெடி + திகில் கலந்த பேன்டசி வெப் தொடர்!
ஓவியக் கலையின் அழியும் நிலையைக் காப்பாற்றப் போராடும் சுவாரஸ்யமான பயணத்தை, நகைச்சுவையும் திகிலும் கலந்த ஃபேன்டஸி பாணியில் சொல்லும் புதிய வெப் தொடர் “வர்ண கதைகள்”. ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே. ஜெயச்சந்திரன் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்க, ‘இறப்பின் ரகசியம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இமானுவேல் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் வாய்ப்புத் தேடி அலையும் நான்கு நண்பர்கள் மேற்கொள்ளும் எதிர்பாராத பயணமும், அங்கு அவர்கள் சந்திக்கும் ஒரு விசித்திரமான கதாபாத்திரமும் இத்தொடரின் கதைக் களமாக அமைகிறது. நகைச்சுவை, திகில் மற்றும் கற்பனை நயம் ததும்பும் திரைக்கதையோடு உருவாக்கப்படும் இந்த வெப் தொடர் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்தம் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் தயாராகி வருகிறது.
இத்தொடரில் நகைச்சுவை நடிகர் மாறன், சென்ராயன், தயாரிப்பாளர் ஜே. ஜெயச்சந்திரன், ப்ரணா, ஆர்.ஜே. புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் கலக்குகிறார்கள். இவர்களுடன் நித்யா குயின், ரோஹிந்த் மற்றும் தீபா ஆகியோரும் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, வழக்கமான நடிகர்களைச் சாராத ஒரு முற்றிலும் வித்தியாசமான சிறப்பு கதாபாத்திரம் இத்தொடரில் இடம்பெறுவது ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸாக இருக்கப் போகிறது.
திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக அணிதிரண்டுள்ளனர். அஷ்வின் நோயல் கேமரா கமெராக்களைக் கையாண்டு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீமன் கலை இயக்கத்தையும், நந்தா படத்தொகுப்புப் பணிகளையும் கவனிக்கின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளைப் புவன் செல்வராஜ் கவனித்து வருகிறார்.
இத்தொடரின் தொடக்கக் பூஜை படக்குழுவினர் அனைவரும் உற்சாகமாகக் கலந்துகொள்ள மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்டமாக நான்கு எபிசோடுகளுக்கான படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவிருப்பதாக இயக்குநர் இமானுவேல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கலை மற்றும் கலைஞர்களின் பெருமையைச் சொல்லும் இந்த ஃபேன்டஸி ஹாரர் காமெடி வெப் தொடர் ஓடிடி ரசிகர்களைக் குதுகலப்படுத்தத் தயாராகி வருகிறது!

