Don’t Trouble The Trouble : விமர்சனம் : மனதிற்கு Acceptable ஆகிறதா?
ஃபகத் ஃபாசில் நடிப்பில், ராஜமௌலியின் வழிகாட்டலில் கார்த்திகேயா தயாரிப்பில் உருவான ‘டோண்ட் டிரபிள் த டிரபிள்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது என்பதைப் புதிய கோணத்தில் அலசுகிறது இந்தத் தொகுப்பு.
கதைக்களம்
சூரி (ஃபகத் ஃபாசில்) ஆம்புலன்ஸ் ஓட்டிப் பந்தயம் கட்டிப் பணம் ஈட்டும் வழக்கம் கொண்டவர். பழங்குடிப் பகுதி கடத்தல்காரரான அஸ்லாம் என்பவரிடம் சிக்கிக்கொள்ளும் அவருக்குச் சில நாள்களுக்குள் பெரும்கொகை தரவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பணத் தவிப்பில் திணறும் அவருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு விநோதமான லாக்கெட் கிடைக்கிறது. அதிலிருந்து தோன்றும் திவ்யா எனும் சிறுமி சூரிக்கு மட்டுமே தெரிகிறாள். தன் மாய சக்தியால் தன் பெற்றோரை மீட்டுத் தருமாறு அவள் கோர, அந்தச் சிறுமியின் உதவியோடு சூரி தனது பணச் சிக்கலைச் சமாளிக்க முயல்வதே இப்படத்தின் மூலக்கதை.
விமர்சனம்
படத்தின் தலைப்புக்கும் கதையின் போக்கிற்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. டிரெய்லரில் காட்டப்பட்ட மாயாஜாலக் காட்சிகள் படத்திலோ வேறுவிதமாகப் பரிமாறப்பட்டுள்ளன. நகைச்சுவை, உணர்ச்சிப் பிரவாகம், மாய வித்தைகள் எதையுமே தெளிவாகக் கையாளாமல் குழப்பமே மிஞ்சியுள்ளது. முதல் பாதியில் கதாநாயகனின் கதாபாத்திரம் ஓரளவு ஆர்லத்தைத் தூண்டினாலும், போகப்போக அது தொய்வடைகிறது. இடைவேளைக் காட்சி பார்வையாளர்களுக்கு முன்பே ஊகிக்க முடிகிறது. இரண்டாம் பாதியின் நீளம் சற்றுச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், கிளைமாக்ஸ் உணர்வுகள் மட்டுமே ஓரளவு ஆறுதலாக நிற்கின்றன.
-
நிறைகள்: சிறுமியின் கியூட்டான நடிப்பு, படத்தின் பிரம்மாண்டமான விசுவல் காட்சிகள் மற்றும் இறுதிப் பகுதி எமோஷன்கள் ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ஃபகத் ஃபாசில் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் பலவீனமான திரைக்கதை அதனைச் சோபிக்க விடாமல் செய்கிறது.
-
குறைகள்: லாபகமில்லாத பல காட்சிகள் படத்தைத் சோர்வடையச் செய்கின்றன. பின்னணி இசை பெரிதாகக் கைக் கொடுக்கவில்லை. இயக்குநர் நினைத்த உணர்வுகளைத் திரையில் முழுமையாகக் கொண்டுவரத் தவறியதே இந்தப் படத்தின் பிரதான சறுக்கல்.
சுருக்கமாகச் சொன்னால், இறுதி நேரக் காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் இப்படம் ரசிகர்களுக்குப் பெரிய அளவில் சோதனைதான்.

