மகள்களைப் பெற்ற அப்பாக்களின் தேசிய கீதமாகும் ‘பத்தா’ படத்தின் ‘மகளே..’ பாடல்!

 மகள்களைப் பெற்ற அப்பாக்களின் தேசிய கீதமாகும் ‘பத்தா’ படத்தின் ‘மகளே..’ பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகி, ரசிகர்களின் மனங்களை வென்று வருகிறது. அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. துள்ளலான இசையால் இளைஞர்களைக் கட்டிப்போட்ட சாய் அப்யங்கர், இப்பாடலில் மனதை வருடும் மெலடி பாணியைக் கையாண்டு, கார்த்திக் நேதாவின் வரிகளில் புதிய இசை அனுபவத்தை வழங்கியுள்ளார்.

எண்பதுகளின் இசைக்கூடத்தையும், அக்காலகட்ட பாடல் பதிவு முறையையும் அச்சு அசலாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இப்பாடலின் காட்சியமைப்பு. எண்பதுகளின் இசையும் புகைப்படங்களும் மீண்டும் பிரபலமாகிவரும் நிலையில், இப்பாடல் வீடியோ ரசிகர்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. இதில் இசையமைப்பாளர், பாடகர் என இருவேறு தோற்றங்களில் சாய் அப்யங்கர் தோன்றி அசத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

ஒரு தந்தை தன் அன்பு மகளைக் கொண்டாடும் அழகான பாசப் பொழிவாக இப்பாடல் மலர்ந்துள்ளது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” என்ற கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகள், சாய் அப்யங்கரின் மென்மையான குரலோடு இணைந்து கேட்கும் அனைவரையும் உருக வைக்கின்றன. வழக்கமான வேகமான இசையிலிருந்து விலகி, உணர்வுப்பூர்வமான பாணியை சாய் அப்யங்கர் தேர்ந்தெடுத்திருப்பது இசைப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

திரைவுலகின் முன்னணி பிரபலங்கள் இணைய, அக். உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘பத்தா’ திரைப்படத்திற்கு, இப்பாடல் மாபெரும் தொடக்கமாக அமைந்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Related Posts