லியோ விஷன் – நித்யா மேனன் கூட்டணியில் புதிய ஃபேண்டஸி டார்க் காமெடி!
திரையுலகில் மீண்டும் ஒரு மெகா காம்பினேஷன்! ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற அட்டகாசமான ஹிட் படங்களைக் கொடுத்த லியோ விஷன் (Leo Vision) வி.எஸ். ராஜ்குமார், தனது ‘புரொடக்ஷன் நம்பர் 5’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இம்முறை சர்ப்ரைஸ் சிக்ஸராக, நடிகை நித்யா மேனனின் ‘கேயுரி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாகப் படத்தை தயாரிக்கிறது லியோ விஷன். இதில் கதையின் நாயகியாக நித்யா மேனன் களம் இறங்க, மிரட்டலான ‘ஃபேண்டஸி டார்க் காமெடி’ கதையை இயக்குகிறார் இயக்குநர் டி.கே.!
கூடுதல் ஸ்பெஷலாக, திரையரங்கில் ரசிகர்களுக்குத் தரமான அனுபவத்தைக் கொடுக்க கிரியேட்டிவ் புரொடியூசராகக் கை கோர்த்துள்ளார் பிரபல இயக்குநர் விக்ரம் கே. குமார்.
ஏ. சக்திவேல் ஒளிப்பதிவைக் கவனிக்க, ரிச்சர்ட் கெவின் கூர்மையான படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். லியோ விஷன் – நித்யா மேனன் – இயக்குநர் டி.கே. – விக்ரம் கே. குமார் என வெற்றிக் கூட்டணி இணைந்துள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான்-இந்திய அளவில் வெளியாகவுள்ளது.
படத்தின் தலைப்பு, மாஸான நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அடுத்தடுத்த தெறிக்கும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது!

