‘விடியும் காத்திரு’: மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்! உறை வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர்!

‘விடியும் காத்திரு’: மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்! உறை வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர்!

எம்.எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாகக் களம் இறங்கியிருக்கும் புத்தம் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இத்திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் செம ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராகப் பலம் சேர்க்கிறார். முன்னணி இயக்குநர்களான பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரின் படப் பணிகளில் கதை விவாதங்களில் பட்டையைக் கிளப்பிய ஆர். அரவிந்த ராஜன், இப்படத்தின் மூலம் இயக்குநராக முதன்முறையில் தடம் பதிக்கிறார்.முதன்மைக் கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் அசத்த, அவருக்கு ஜோடியாக அம்ஜதா ஷெரின் முதன்மைப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன், காக்கிச் சட்டையில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நெஞ்சைப் படபடக்க வைக்கும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களைச் சீட்டின் நுனிக்கே வரவழைக்கும் அதிரடித் திரைக்கதையோடு தயாராகி வருகிறது. கொலை நடந்த ஒரு மர்ம வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு அங்கு எதிர்கொள்ள நேரும் திடுக்கிடும் அமானுஷ்யச் சம்பவங்களே இதன் விறுவிறுப்பான மையக்கதை!

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பிரம்மாண்ட சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் உறைந்து நிற்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் சட்டென்று நெஞ்சை உலுக்குகிறது. அதோடு கதவில் செதுக்கப்பட்டுள்ள “யூ ஆர் நெக்ஸ்ட்” எனும் வாசகம், படத்தின் மீதான மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

இப்படத்திற்குச் சி. சத்யா இசையமைக்க, ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பொறுப்புகளை மிக நேர்த்தியாகக் கவனித்துள்ளார். மிரட்டலான சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் வடிவமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராகவும், ராஜன் வழிவிட்டான் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், திரையரங்க வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பிரம்மாண்ட படைப்பான ‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.

Related Posts