‘ஒரிஜினல் மான்ஸ்டர்’: டைட்டில் & மோஷன் போஸ்டர்: பான்-இந்தியா அசுர வேட்டை ஸ்டார்ட்!

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’: டைட்டில் & மோஷன் போஸ்டர்: பான்-இந்தியா அசுர வேட்டை ஸ்டார்ட்!

இந்தியத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தலைப்பும் மோஷன் போஸ்டரும் மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெகு விமரிசையாக வெளியிடப்பட்டன! தனது சொந்த எல்லையைக் கடந்து அகில இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் பயணத்தைத் தொடங்கத் தயாராகியுள்ளது இத்திரைப்படம்.

இவ்விழாவில் இந்திய திரையுலகின் முக்கியப் புள்ளிகள் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். பான்-இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார், திருமதி கீதா சிவராஜ்குமார், பிரபல இயக்குநர் ஆர். சந்துரு, தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட், நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டு மாலையைக் கொண்டாட்ட மயமாக்கினர்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மோஷன் போஸ்டரை டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் படக்குழுவினர் இணைந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். மேடையில் தலைப்பு வெளியான அந்த நொடியில் அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. படைப்பாற்றலின் உச்சமாக அமைந்த இந்நிகழ்வு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒரே அடியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.

ஊடகங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் அமோ வரவேற்போடு மும்பை வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் அடுத்தகட்டப் பிரச்சார வேட்டை தீவிரமடைந்துள்ளது. பான்-இந்தியா தளத்தில் தடம் பதிப்பதற்கான முதல் அடியை மிகக் கம்பீரமாக எடுத்து வைத்துள்ளது இத்திரைப்படம்!

🔗 https://youtu.be/bfrZLRxsink

Related Posts